Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் ஒரு "பெய்ல்ஸ்" பிராப்ளம்... பந்து பட்டும் பெய்ல்ஸ் விழாததால் தப்பிப் பிழைத்த மிஸ்பா!

அடிலெய்ட்: டக் அவுட் ஆவதில் இருந்து நூலிழையில் தப்பினார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக். ஸ்டம்பில் பந்து பட்டும் பெயில்ஸ் விழாததால் அதிருஷ்டவசமாக மிஸ்பா தப்பினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் களமிறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஹசில்வுட் பந்தை சந்தித்தார். லெக் ஸ்டெம்ப் திசையில் பிட்ச்சாகி வந்த பந்தை, லெக் சைடில் தட்ட முயன்றார் மிஸ்பா. ஆனால் பேட்டில் படாத பந்து, மிஸ்பா தொடையில் பட்டதுடன், ஸ்டம்பிலும் பட்டு சென்றது. இதனால் ஸ்டம்பிலுள்ள பல்புகள் கண் சிமிட்டின.

மிஸ்பா அவுட் ஆகிவிட்டதாக நினைத்த ஹசில்வுட் கொண்டாட்டத்திலும் இறங்கினார். ஆனால், ஸ்டம்பில் இருந்து பெயில்ஸ் கீழே விழாததால் ஆஸி. வீரர்கள் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து டிவி ரிப்ளேயில் பார்த்தபோது, ஸ்டம்பில் இருந்து பெயில்ஸ் மேலே போவதும், மீண்டும், கீழே இறங்கி ஸ்டம்பிலேயே சமத்தாக உட்கார்ந்து கொள்வதும் தெரியவந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மிஸ்பா தான் ஆடிய 6 லீக் ஆட்டங்களில் 4ல், அரை சதம் அடித்து பாகிஸ்தானுக்கு முதுகெலும்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில், யு.ஏ.இ அணி பந்து வீச்சின்போது, அயர்லாந்தின் எட் ஜாய்ஸ் இதேபோல தப்பி பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 20, 2015, 10:39 [IST]
Other articles published on Mar 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+