Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாக். தான் ப்ளானே கொடுத்தாங்க”.. இந்திய டாப் ஆர்டரை வீழ்த்தியது எப்படி?.. லுங்கி இங்கிடி ஓபன் டாக்

பெர்த்: இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எப்படி துல்லியமான விக்கெட் எடுத்தேன் என்பது குறித்து தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் குவிக்க, பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி கண்டது.

தரமான பவுலிங்

தரமான பவுலிங்

இந்தியாவின் பேட்டிங் வரிசை மிகவும் ஆழமான ஒன்று என பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க பவுலர் லுங்கி இங்கிடியிடம் இந்தியாவின் ஸ்டார் வீரர்கள் சரணடைந்தனர். இந்தியாவின் தூண்களாக பார்க்கப்படும், கே.எல்.ராகுல் (9), ரோகித் சர்மா (15), விராட் கோலி (12), ஹர்திக் பாண்ட்யா (2) என 4 பேரையுமே லுங்கி இங்கிடி வீழ்த்தி அசத்தினார்.

அட்டகாச ரெக்கார்ட்

அட்டகாச ரெக்கார்ட்

இந்த தொடரில் வெளியே உட்காரவைக்கப்பட்டிருந்த லுங்கி இங்கிடி, இந்திய போட்டிக்காக ஸ்பெஷலாக வரவைக்கப்பட்டார். அதற்கு கிடைத்த பலனாக 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார். அவர் வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இங்கிடி விளக்கம்

இங்கிடி விளக்கம்

இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தியது எப்படி என லுங்கி இங்கிடி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் சிறப்பாக பந்துவீச முக்கிய காரணமே பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் தான். ஏனெனில் இதே மைதானத்தில் கடைசியாக பாகிஸ்தான அணி தான் விளையாடியிருந்தது. அவர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். எனவே அவர்கள் என்ன திட்டத்தை பயன்படுத்தினர், எந்த லைனில் பந்து வீசினார்களோ அதனை நன்றாக கவனித்து வைத்திருந்தேன்.

மைதான தன்மை

மைதான தன்மை

பாகிஸ்தான் வீசிய லைனிலேயே வீசுவதற்கு நன்றாக பயிற்சி எடுத்து வந்தேன். அதை இந்தியாவுடனான போட்டியிலும் மைதானத்தின் தன்மையை அறிந்து வீசினேன். இதற்கு கொடுத்த பலன் தான் முன்னணி வீரர்களின் விக்கெட்கள் ஆகும். இந்தியாவுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருந்து பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என லுங்கி இங்கிடி கூறியுள்ளார்.

Story first published: Monday, October 31, 2022, 17:36 [IST]
Other articles published on Oct 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+