Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருச்சியை வென்றது..... கோவைக்கு 8 விக்கெட்டில் வெற்றி!

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

திருச்சி Vs கோவை Match

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.

lyca kovai kings wins over ruby trichy warriors in the tnpl

முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. கோவையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை / முடிவுகள்

திருச்சியின் எஸ். சுரேஷ் குமார் 35, பரத் சங்கர் 24, சோனு யாதவ் 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கோவையின் அஜித் ராம், மணிகண்டன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து விளையாடிய கோவை, 13.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துவக்க ஆட்டக்காரர் ஷாருக் கான் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புள்ளி பட்டியல்

இதன் மூலம் கோவை, 4 ஆட்டங்களில் 2வது வெற்றியைப் பெற்றது.

Story first published: Tuesday, July 24, 2018, 15:05 [IST]
Other articles published on Jul 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+