Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL 2019: காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ்..! 15 ரன்களில் கலக்கல் வெற்றி

சென்னை: டிஎன்பிஎல் தொடரில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22வது லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

இதனையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாருக்கான் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து வலுவான தொடக்கம் தந்தனர். அபினவ் முகுந்த் 32 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஷாருக்கான் அரைசதம்

ஷாருக்கான் அரைசதம்

அடுத்த வந்த முகமது அட்னன் கான் 2 ரன்னிலும், அகில் ஸ்ரீநாத் 12 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். மறுமுனையில் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஷாருக் கான் 59 ரன்களில் வெளியேறினார். இறுதியில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது.

விக். விபரம்

விக். விபரம்

கடைசியில் மலோலன் ரங்கராஜன் 11 ரன்னுடம், அஜித் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.காரைக்குடி காளை அணியின் சார்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், ஷாஜகான், சுவாமி நாதன், அஸ்வின் குமார், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அனிருதா 24 ரன்கள்

அனிருதா 24 ரன்கள்

இதனையடுத்து, 155 ரன்கள் என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக சூர்யபிரகாஷ் மற்றும் அனிருதா ஆகியோர் வந்தனர். சூர்யபிரகாஷ் 2 ரன்னிலும், அனிருதா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மகேஷ் டக் அவுட்

மகேஷ் டக் அவுட்

பின்னர் வந்த ஸ்ரீனிவாசன் 7 ரன்னிலும், யோ மகேஷ் ரன் எதுவும் எடுக்காமலும், மான் பாப்னா 21 ரன்னிலும், கணேஷ் 20 ரன்னிலும் அவுட்டாகினர். ஷாஜகான் மற்றும் ராஜ்குமார் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.

15 ரன்களில் வெற்றி

15 ரன்களில் வெற்றி

இறுதியில் காரைக்குடி காளை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியில் ஷாஜகான் 41 ரன்களுடனும், அஸ்வின் குமார் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Story first published: Monday, August 5, 2019, 0:23 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+