For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருச்சியை பவுலிங்கில் கவிழ்த்த கோவை கிங்ஸ்..! 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

Recommended Video

TNPL - திருச்சியை பவுலிங்கில் கவிழ்த்த கோவை கிங்ஸ்

நெல்லை: திருச்சி வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது.

நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில், திருச்சி வாரியர்சும், கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை, முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் களமிறங்கினர்.

Lyca kovai kings won by 26 runs against ruby trichy warriors

முகுந்த் 5 ரன்னிலும், ஷாருக்கான் 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் ரஞ்சன் பால் 34 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். ரங்கராஜன் 22 ரன்னில் பெவிலியன் திரும்ப, அதிரடியாக ஆடிய அந்தோனி தாஸ் 13 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 32 ரன்கள் விளாசினார்.

Lyca kovai kings won by 26 runs against ruby trichy warriors

இறுதியில் கோவை கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் தரப்பில் விக்னேஷ் மற்றும் பொய்யா மொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 162 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி வாரியர்ஸ் தொடக்க வீரர்கள் கேப்டன் முகுந்த் 2 ரன்னிலும், அரவிந்த் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Lyca kovai kings won by 26 runs against ruby trichy warriors

அடுத்து களமிறங்கிய ஆதித்யா மற்றும் கணேஷ் அணியை சரிவிலிருந்து சற்று மீட்டனர். ஆனாலும் ஆதித்யா 27 ரன்களிலும், கணேஷ் 24 ரன்களிலும் வெளியேறினர். அதன் பின் வந்தவர்கள் கோவை கிங்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

Lyca kovai kings won by 26 runs against ruby trichy warriors

முடிவில், திருச்சி வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. கோவை கிங்ஸ் அணியில் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Sunday, July 28, 2019, 0:04 [IST]
Other articles published on Jul 28, 2019
English summary
Lyca kovai kings won by 26 runs against ruby trichy warriors.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+