
தோனியின் முடிவு
கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து விலகியதில் இருந்து, சமூக வலைதளங்களிலும் தோனியின் பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. ட்விட்டரில் மிக ஆக்டிவாக இருந்த அவர், தற்போது பதிவுகளே போடாமல் இருந்து வருகிறார்.

திடீர் செயல்பாடு
இந்நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தனது இன்ஸ்டாகிராம் முகப்பில் ( Display picture ) மூவர்ண தேசிய கொடி புகைப்படத்தை வைத்து தோனி தேசப்பற்றை காட்டியுள்ளார்.

சமஸ்கிருத வாசகம்
இதுமட்டுமின்றி சமஸ்கிரத மொழியில் அந்த புகைப்படத்தில் ஒரு வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது " இந்த பாரத தாயின் குடிமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் பாராட்டி வருகின்றனர். ஆனால் தோனி இப்படி செய்வதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு.

பிரதமரின் வேண்டுகோள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் சுதந்திர தினத்தை கொண்டாட, பொதுமக்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது அலுவலகம், வீடுகள் என தேசிய கொடியை ஏற்ற வேண்டும் எனக் கூறினார். இதனை ஏற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் தோனி மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

தோனியின் நேசம்
பொதுவாகவே தோனி எப்போதுமே தனது தேசத்தின் மீதான காதலை வெளிக்காட்டி கொண்டே தான் இருப்பார். அவரின் கீப்பிங் க்ளவுஸ்கள் இந்திய ராணுவத்தை குறிக்கும் நிறத்தில் இருக்கும். இதே போல அவர் இந்திய ராணுவத்தில் சிறப்பு அதிகாரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











