Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என் 10, 12வது மதிப்பெண்கள் இதுதான்” பள்ளி பருவம் குறித்து மனம் திறந்த தோனி.. இப்படி ஒரு மாணவரா?

ஒசூர்: கிரிக்கெட் வீரர் தோனி தனது பள்ளி அனுபவம் குறித்து மாணவர்களிடையே வெளிப்படையாக பேசியது வரவேற்பை பெற்றுள்ளது.

எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான அவரின் பங்களிப்பு தொடர்ந்துக்கொண்டே தான் உள்ளது.

அந்தவகையில் சிஎஸ்கேவுடன் கூட்டணி அமைத்து தனது பள்ளியில் புதிதாக மைதானத்தை உருவாக்கியுள்ளார்.

மாணவர்களின் கேள்வி

மாணவர்களின் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் எம்.எஸ்.தோனிக்கு சொந்தமாக " எம்.எஸ்.தோனி குளோபல்" என்ற பெயரில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை நேற்று தோனி திறந்துவைத்தார். பின்னர் அந்த பள்ளி மாணவர்களுடன் தோனி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்படுத்தப்பட்டன.

தோனி தந்த பதில்

தோனி தந்த பதில்

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் தோனி தனது பள்ளி பருவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார். உங்களுக்கு பிடித்த பாடம் என மாணவர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தோனி, " விளையாட்டையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால் அதுதான் எனக்கு பிடித்தது. 7ம் வகுப்பில் இருந்து நான் கிரிக்கெட் ஆடுகிறேன். அப்போது இருந்தே பள்ளியில் நான் நடுநிலையான மாணவன் தான்.

தந்தையின் நம்பிக்கை

தந்தையின் நம்பிக்கை

கிரிக்கெட் விளையாட சென்றதால், பள்ளியின் வருகைப்பதிவு சதவீதம் எனக்கு குறைந்துக்கொண்டே சென்றன. இதனால் எனக்கு சிரமங்கள் ஏற்பட்டன. 10ம் வகுப்பில் ஒரு சில பாடங்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. தேர்வில் என்ன எழுதுவது என்றே புரியாத அளவிற்கு கடினமாக இருந்தேன். இதனால் நான் 10ம் வகுப்பு கூட தாண்ட மாட்டேன் என தந்தை முடிவுக்கே வந்துவிட்டார்.

இதுதான் மதிப்பெண்கள்

இதுதான் மதிப்பெண்கள்

ஆனால் நான் சிறந்த படிப்பாளி என்றும் காட்டினேன். 10ம் வகுப்பில் 66 சதவீதத்துடனும் 12ம் வகுப்பில் 56 சதவீதத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றேன். ரிசல்ட்டை கேட்டு மகிழ்ச்சியடைந்த முதல் நபர் தந்தை தான் என எம்.எஸ்.தோனி கூறினார். தோனி வணிகத்தில் இளங்கலை பட்டம் ( B.com) படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 12, 2022, 13:41 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+