Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விசில் போடு.. விஜய் - மகேஷ் பாபுவை டார்கெட் செய்யும் தோனி.. ஓகே சொன்ன தளபதி..படம் எப்போது தெரியுமா?

சென்னை: கிரிக்கெட்டை போலவே திரைப்பட உலகிலும், தான் ஒரு மாஸ்டர் என எம்.எஸ். தோனி நிரூபித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ள தோனி, பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்து வருகிறார். இதில் சினிமாவும் முக்கியமான ஒன்றாகும்.

தோனியின் அதிரடி முடிவு

தோனியின் அதிரடி முடிவு

தோனி எண்டர்டெயிண்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அனைத்துமே மிக குறைந்த பட்ஜெட் படங்கள் ஆகும். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் முழு வீச்சில் சினிமாவில் களமிறங்க தோனி திட்டமிட்டுள்ளார்.

விஜய்யுடன் ஒப்பந்தம்

விஜய்யுடன் ஒப்பந்தம்

இதற்காக தமிழகத்தை தான் முதலில் குறிவைத்துள்ளார். தமிழில் நடிகர் விஜய்-ஐ வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விஜய்-யுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவிட்டதாகவும், தற்போது ஒப்பந்தம் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு, தோனியுடன் பணியாற்றுவதாக விஜய் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எந்த வருடம்?

எந்த வருடம்?

தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க மீண்டும் அட்லீ கூட்டணி சேரவுள்ளதாக தெரிகிறது. எனவே தளபதி 70வது படத்தை தோனி தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தோனிக்கு விருப்பமான எண் 7 ஆகும். இதற்காக சென்னையில் அலுவலகம் பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மகேஷ் பாபுவும் கூட்டணி

மகேஷ் பாபுவும் கூட்டணி

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற தென் மாநிலங்களையும் தோனி குறிவைத்துள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபுவிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல மலையாளத்தில் பிரித்விராஜுடனும், கன்னடத்தில் கிச்சா சுதீப்புடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன.

Story first published: Wednesday, October 12, 2022, 14:17 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+