Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'வாத்தியார்' தோனியையே வியக்கவைத்த தமிழக வீரர்.. இனி அதிர்ஷ்டம் தான்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!

டெல்லி: சையது முஷ்டக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் மீது தோனியின் கவனம் விழுந்திருப்பதால் தமிழக வீரர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

Recommended Video

Dhoni-ஐ வியக்க வைத்த Sharukh Khan.. இணையத்தை கலக்கும் புகைப்படம்!

இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான சையது முஷ்டக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா டாப் ஆர்டர் பேட்டிங் முற்றிலுமாக சொதப்பியது. தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் (0), மணிஷ் பாண்டே (13) என வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதன்பின்னர் வந்த கருண் நாயர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, எஸ்.ஆர்.ஷரத் 16 ரன்னில் சுருண்டார். 87 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கர்நாடகா அணிக்கு, அபினவ் மனோகர் மற்றும் பிரவீன் துபே ஆகிய இருவரும் நம்பிக்கை அளித்தனர். கடைசி நேரத்தில் அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் கர்நாடகா அணி 151 ரன்கள் குவித்தது.

நிதான ரன்சேர்ப்பு

நிதான ரன்சேர்ப்பு

152 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணி தொடக்கத்தில் வேகமாக ரன்களை சேர்த்தபோதும், மிடில் ஆர்டர்களில் சோர்வடைந்தது. தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் (23), ஜகதீசன் (41) ரன்களும் சேர்த்தனர். இதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க 17 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அப்போது தமிழ்நாடு அணி வெற்றி பெற 17 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தில் சிக்ஸர்

கடைசி பந்தில் சிக்ஸர்

இப்படிபட்ட இக்கட்டான சூழலில் களமிறங்கிய இளம் வீரர் ஷாருக்கான் கர்நாடகா அணி பந்துவீச்சை விளாசித்தள்ளினார். இதனால் தமிழ்நாடு அணி வெகு விரைவாக ரன்களை உயர்த்தி கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. மிகவும் அழுத்தமான சூழலின் போது தமிழகம் வெற்றி பெறாது என ரசிகர்கள் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் நம்பிக்கை நாயகனை போன்று கடைசி பந்தில் சிக்ஸரை விளாசி கோப்பையை வென்றுக் கொடுத்தார் ஷாருக்கான். 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தமாக 33 ரன்களை சேர்த்தார். அவரின் அந்த ஆட்டம் இந்திய அணியிலேயே இடம் பெற வைக்கும் என முன்னாள் வீரர் பாராட்டி வருகின்றனர்.

தோனி ஆச்சரியம்

தோனி ஆச்சரியம்

இந்நிலையில் இந்திய அணியின் 'வாத்தியார்' எம்.எஸ்.தோனியின் பார்வையில் ஷாருக்கான் பட்டுள்ளார். சையது முஷ்டாக் அலி இறுதிப்போட்டியை தோனி தொலைக்காட்சி மூலம் பார்த்திருந்துள்ளார். அதில் ஷாருக்கான் அடித்த கடைசி சிக்ஸரை பார்த்து அவர் வியப்படைந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றுக்கொடுப்பதற்கு புகழ்பெற்றவர் எம்.எஸ்.தோனி. டி20 உலகக்கோப்பையின் போது ஆலோசகராக செயல்பட்டு வந்தார். தற்போது தன்னை போன்றே மற்றொரு இளம் வீரரை அவர் கண்டிருப்பதால், நிச்சயம் இந்திய அணியில் ஷாருக்கான் இடம்பெற வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Story first published: Monday, November 22, 2021, 18:06 [IST]
Other articles published on Nov 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+