சையத் அலி கோப்பை தொடரோட நாயகன்... டெல்லி அணி ஏலத்துல எடுத்துருக்கு!
சென்னை : இளம் வீரர் மணிமாறன் சித்தார்த்தை டெல்லி கேபிடல்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்று திறனை வெளிப்படுத்தியவர் எம் சித்தார்த்.

இந்நிலையில் அந்த தொடர் தந்த வெற்றியை அடுத்து தற்போது இவரை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
22 வயதான மணிமாறன் சித்தார்த் கடந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டங்களை தந்தார். மேலும் இறுதிப்போட்டியில் விளையாடி ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார். தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாட்டு அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இவர் இதுவரை விளையாடியள்ள 6 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் மூன்று 4 விக்கெட்டுகள் சாதனையும் அடக்கம். இந்நிலையில் தற்போது ஐபிஎல் ஏலத்தில் இவரை டெல்லி கேபிடல்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications