Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“3 வருஷத்துல என்னதான் செய்தீர்கள்”.. இந்திய அணியின் தொடர் தோல்விகள்.. முன்னாள் வீரர் சரமாரி கேள்வி!

மும்பை: வங்கதேசத்திடம் தோல்வியடைந்த இந்திய அணியின் சீனியர் வீரர்களிடமும், பிசிசிஐ-யிடமும் முன்னாள் வீரர் மதன் லால் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார்.

2021ம் ஆண்டு இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக இருந்த சூழலில், 2022ம் ஆண்டு அதிக தோல்விகளை பெற்ற ஆண்டாக மாறும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடர் முதல் டி20 உலகக்கோப்பை வரை தொடர் ஏமாற்றங்களை கொடுத்தது. இதன் பின்னர் நடந்த 2 தொடர்களிலும் தோல்வியை பெற்றுள்ளது.

இந்தியாவின் சொதப்பல்

இந்தியாவின் சொதப்பல்

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோசமாக தோற்ற இந்திய அணி, வங்கதேச அணியிடமும் தோல்வியை அடைந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை பெற்றுள்ளது. 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள சூழலில் இந்தியா இப்படி மோசமாக ஆடுவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் மதன் லால் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார். அதில், நீங்கள் புள்ளிவரங்களை எடுத்து பார்த்தால் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றோர் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை சதங்களை அடித்திருப்பார்கள். குறைந்தது கடந்த ஓராண்டில் எத்தனை சதம் அடித்திருப்பார்கள்? அதனை பார்த்தால் அவல நிலை தெரியும்.

மிகவும் கடினம்

மிகவும் கடினம்

வயதாகி வருவதால் உங்களின் கண்கள் மற்றும் கைகளில் இருந்த ஒற்றுமையும் வேகமும் குறைந்துவிட்டது. எனினும் அவர்கள் அனுபவமிகுந்த வீரர்கள். சிறப்பாக செயல்பட்டே தீர வேண்டிய பொறுப்பு உள்ளது. ஒரு அணியின் டாப் ஆர்டர் சொதப்பினால் பின்னர் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று என மதன் லால் கூறியுள்ளார்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் பவுலிங் படையும் மிக பலவீனமாக உள்ளது. அவர்கள் விக்கெட் எடுக்கவே தெரியாதது போன்று மாறிவிட்டது. வங்கதேசம் 69 /6 என இருந்த போதும், 271 ரன்கள் குவித்தது எப்படி?.. ஒவ்வொரு ஃபார்மெட்டிற்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் வீரர்கள் தான் தேவை. வெவ்வேறு வடிவத்திற்கு வெவ்வேறு வீரர்கள் ஏன் இல்லை, அனைத்து நாடுகளும் செய்யும் போது, இந்தியாவும் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, December 9, 2022, 22:17 [IST]
Other articles published on Dec 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+