For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2019: திருச்சியை தெறிக்கவிட்ட மதுரை பாந்தர்ஸ்..! திக், திக் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி

Recommended Video

TNPL 2019 | Super Over | சூப்பர் ஓவரில் திருச்சியை வென்ற மதுரை

திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

திண்டுக்கல்லில் 16வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சும், நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. கடந்த இரு ஆட்டங்களில் ஆடாத முரளி விஜய், திருச்சி அணிக்கு திரும்பினார். டாஸ் ஜெயித்த மதுரை கேப்டன் ஷிஜித் சந்திரன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முரளிவிஜயும், முகுந்தும் திருச்சி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான தொடக்கம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தனர். முகுந்த கிளீன் போல்டு ஆக, ஒரு பக்கம் முரளிவிஜய் நிலைத்து நின்று ஆடினார்.

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

ஆனாலும் இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மதுரை பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திருச்சி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.

143 ரன்கள்

143 ரன்கள்

பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சரத் ராஜ், ஆதித்யா கிரிதர், அருண் கார்த்திக் ஆட்டமிழந்தனர்.

விக். வீழ்ச்சி

விக். வீழ்ச்சி

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் கவுசிக் 35 ரன்களும், மிதுன் 12 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ஓவரில் வெற்றி

சூப்பர் ஓவரில் வெற்றி

இதனால் ஆட்டம் டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ், 12 ரன்களே எடுத்தது. அடுத்து வந்த திருச்சி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 3 ரன்களே எடுக்க மதுரை பாந்தர்ஸ் வென்றது.

Story first published: Thursday, August 1, 2019, 0:28 [IST]
Other articles published on Aug 1, 2019
English summary
Madurai panthers won against trichy warriors in tnpl series by super over.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+