Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை பைனல்களை நடத்திய பெருமை எந்தெந்த ஸ்டேடியங்களுக்கு தெரியுமா?

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை நடத்தும் கவுரவம் லண்டன் லாட்ஸ் மைதானத்தை தவிர 7 ஸ்டேடியங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த இந்த ஸ்டேடியங்கள் குறித்த ஒரு பார்வை:

கிரிக்கெட் உலக கோப்பை 1975ம் ஆண்டு அறிமுகமானது. முதல் மூன்று உலக கோப்பை பைனல்களுமே லண்டன் லாட்ஸ் மைதானத்தில்தான் நடந்தன. 1975, 1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளின் உலக கோப்பை பைனல்களை நடத்தி ஹாட்ரிக் பெருமை பெற்றது லாட்ஸ்.

முதல் இரு தொடர்களிலும் மே.இ.தீவுகள் வெற்றி பெற்ற நிலையில், 3வது தொடரில் இந்தியா சாம்பியனாகியது.

முதல் முறையாக கொல்கத்தா

முதல் முறையாக கொல்கத்தா

முதல்முறையாக லாட்சுக்கு வெளியே உலக கோப்பை பைனல் போட்டியை நடத்திய பெருமை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்குதான் கிடைத்தது. 1987ல் நடந்த நான்காவது, உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி இம்மைதானத்தில் நடந்தது. ஆஸ்திரேலியா சாம்பியனாகியது.

மெல்பர்னில் பாகிஸ்தான் வெற்றி

மெல்பர்னில் பாகிஸ்தான் வெற்றி

1992ல் 5வது உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள எம்சிஜி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இலங்கை சாம்பியன்

இலங்கை சாம்பியன்

1996ம் ஆண்டு நடந்த 6வது உலக கோப்பை போட்டிகளின் இறுதி போட்டி பாகிஸ்தானின் லாகூர் கட்டாஃபி ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியனாகியது.

பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸி.

பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸி.

1999ல் மீண்டும் லாட்ஸ் மைதானத்தில் உலக கோப்பை பைனல். இம்முறை, பாகிஸ்தானை வீழ்த்தி, ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 7வது உலக கோப்பையை தூக்கி முத்தமிட்டது.

இந்தியாவுக்கும் அதே கதி

இந்தியாவுக்கும் அதே கதி

2003ல் தென் ஆப்பிரிக்காவின் வாண்டர்ஸ் மைதானம், இறுதி போட்டியை நடத்தும் பெருமையை பெற்றது. அபாரமாக ஆடி பைனலுக்கு வந்த இந்தியாவை, ஆஸ்திரேலியா எளிதாக தோற்கடித்து, 8வது உலக கோப்பை தொடரின் சாம்பியன் ஆகியது.

ஆஸி.க்கு ஹாட்ரிக் வெற்றி

ஆஸி.க்கு ஹாட்ரிக் வெற்றி

2007ல், 9வது உலக கோப்பை தொடரின் பைனல் மேற்கிந்திய தீவுகளின் பிரிட்ஜ்டவுன் நகரிலுள்ள, கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இருளுக்கு நடுவே நடந்த சர்ச்சைக்குறிய இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனாகியது. இது ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் உலக கோப்பை வெற்றியாகவும் அமைந்தது.

விஸ்வரூபம் எடுத்த இந்தியா

விஸ்வரூபம் எடுத்த இந்தியா

2011ல் மீண்டும் உலக கோப்பை பைனலை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. இம்முறை கொல்கத்தாவுக்கு பதிலாக மும்பை வான்கடே மைதானத்தை தேர்ந்தெடுக்கப்பட்டது. இறுதி போட்டியில் இலங்கையை அனாயாசமாக வீழ்த்தி சாம்பியனாகியது டோணி தலைமையிலான இந்திய அணி.

மீண்டும் மெல்பர்ன்

மீண்டும் மெல்பர்ன்

இப்போது 11வது உலக கோப்பை போட்டியின் இறுதி போட்டி மெல்பர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1992லும் இதே மைதானத்தில் பைனல் நடந்துள்ளதால், லாட்சுக்கு பிறகு, 2வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தும் பெருமையை இம்மைதானம் பெறுகிறது. பத்தோடு, பதினொன்றாக மீண்டும் நாமே உலக கோப்பையை தூக்குவோமா.. பொறுந்திருந்து பார்க்கலாமே..

Story first published: Friday, February 6, 2015, 13:17 [IST]
Other articles published on Feb 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+