For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

48 பந்தில் 124 ரன்.. 13 ஃபோர், 9 சிக்ஸ்.. சேப்பாக்கத்தில் ட்ரிபிள் செஞ்சுரி அடிச்ச அதே கருண் நாயர்!

பெங்களூரு: 2024 மகாராஜா ட்ராபி டி20 தொடரில் கருண் நாயர் 48 பந்துகளில் 128 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உலகிற்கும் தனது வரவை அறிவித்து இருக்கிறார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 303 ரன்கள் அடித்த போதும் இந்திய அணியில் வாய்ப்பின்றி இருந்த அவர் தற்போது டி20 தொடரில் பவுண்டரி மழை பொழிந்து, மிரள வைத்துள்ளார்.

2024 மகாராஜா ட்ராபி தொடர் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. மைசூர் வாரியர்ஸ் மற்றும் மங்களூர் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. மைசூர் வாரியர்ஸ் ஆணி முதலில் பேட்டிங் செய்தது.

Karun Nair

அந்த அணியின் துவக்க வீரர்கள் அஜித் கார்த்திக் 11, எஸ்யூ கார்த்திக் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கருண் நாயர் மூன்றாம் வரிசையில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். 13 ஃபோர், 9 சிக்ஸ் அடித்தார். குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் அவரது அதிரடியால் மைசூர் அணி 47 ரன்கள் சேர்த்தது. 19வது ஓவரில் மூன்று சிக்ஸ் அடித்த கருண் நாயர் 43 பந்துகளில் சதத்தை எட்டினார். 20வது ஓவரில் இரண்டு சிக்ஸ், மூன்று ஃபோர் வரிசையாக அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 25 ரன்கள் கிடைத்தது.

இதை அடுத்து மைசூர் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 48 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சமித் டிராவிட் (முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மகன்) 12 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சுமித் குமார் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மனோஜ் பண்டாகே 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இருந்தார்.

அடுத்து 227 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது மங்களூர் டிராகன்ஸ் அணி. அந்த அணியில் கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். நிக்கின் ஜோஸ் 21 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழையால் போட்டி தடைபட்டது. பின்னர் விஜேடி முறையின்படி மைசூர் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Monday, August 19, 2024, 23:54 [IST]
Other articles published on Aug 19, 2024
English summary
Maharaja Trophy T20: Karun Nair hit 48 ball 124 runs for Mysore Warriors against Mangalore Dragons
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+