Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்.. அடித்துக்கூறும் இலங்கை ஜாம்பவான்.. 2 முக்கிய காரணங்கள் உண்டு!

மும்பை: 2 வீரர்கள் மீண்டும் வந்துள்ளதால் டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

ஆசிய கோப்பையில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காக பவுலிங்கில் முக்கிய மாற்றங்களுடன் டி20 உலகக்கோப்பை அணியை உருவாக்கியிருக்கின்றனர். பேட்டிங் மற்றும் பவுலிங் படையை பார்த்த ரசிகர்களும், வல்லுநர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்திய பலமாக உள்ளது

இந்திய பலமாக உள்ளது

இந்நிலையில் இந்திய அணி அட்டகாசமாக உள்ளதாக இலங்கை வீரர் மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது பும்ரா இல்லாதது தான். ஆனால் அந்த பெரும் குறை தற்போது சரியாகியுள்ளது. அதுவும் ஆஸ்திரேலிய களத்தில் பும்ரா இணைந்திருப்பது ஒரு வித்தியாசமான பவுலிங் யூனிட்டாக இருக்கும்.

 நிம்மதி தரும் கோலி

நிம்மதி தரும் கோலி

இதே போல இந்தியாவுக்கு விராட் கோலி பெரும் நிம்மதியை கொடுத்துள்ளார். வெறும் சதத்தை மட்டும் அவர் அடிக்கவில்லை. மிகப்பெரிய நம்பிக்கையை பெற்றுள்ளார். கோலியை அப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதே புத்துணர்ச்சியுடன் டி20 உலகக்கோப்பையில் விளையாடினால், இந்தியாவுக்கு பெரும் பலம் கிடைக்கும்.

 அது மிஸ்ஸிங்

அது மிஸ்ஸிங்

இந்திய அணியின் செயல்பாடு ஆசிய கோப்பையிலேயே சிறப்பாக இருந்தது என்று நான் கூறுவேன். அனைத்து திட்டங்களும் சிறப்பாக இருந்தன. ஆனால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சற்று நம்பிக்கை வேண்டும். அவர்கள் நம்பிக்கையே இல்லாமல் பதற்றத்திலேயே விளையாடினார்கள். இதனை இனி தவிர்க்க வேண்டும் என ஜெயவர்தனே ஆலோசனைக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 17, 2022, 15:48 [IST]
Other articles published on Sep 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+