Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ms Dhoni: தோனின்னா..? வாக்குவாதம் பண்ணலாமா? அதிகாரமே கிடையாது.. நார் நாராய் கிழித்தெடுத்த நடுவர்

ஜெய்பூர்:மைதானத்துக்கு தோனி வந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அம்பயர் ஹரிஹரன் காட்டமாக கூறியிருக்கிறார்.

நேற்றைய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு 6 பந்தில் 18 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரில் ஒரு பந்து நோபால் என ஒரு அம்பயரால் றிவிக்கப்பட்டு பின்னர் இன்னொரு அம்பயரால் நோபால் இல்லை என அறிவிக்கப்பட்டது.

அதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சிஎஸ்கே கேப்டன் தோனி நேராக களத்திற்கு சென்றார். நோ பால் சர்ச்சை குறித்து நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட வில்லை.

நடுவரிடம் வாக்குவாதம்

நடுவரிடம் வாக்குவாதம்

உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே தோனியின் இந்த செயல் பல விவாதங்களை முன் எடுத்து வைத்துள்ளது. போட்டியின் நடுவே களத்திற்குள் புகுந்து நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது.

நடுவர் ஹரிஹரன்

நடுவர் ஹரிஹரன்

இந் நிலையில் சர்ச்சை குறித்து முன்னாள் நடுவர் ஹரிஹரன் முதன் முறையாக இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ளார். தோனியின் செயலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நெருக்கடி தரும் தோனி

நெருக்கடி தரும் தோனி

தோனி போன்ற ஸ்டார் வேல்யூ வீரர்கள் நடுவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். அவர்கள் முடிவை எடுக்க விடுவதில்லை.

தோனிக்கு அவசியமில்லை

தோனிக்கு அவசியமில்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின் படி அந்த பந்துக்கு நோ பால் வழங்க வேண்டியது லெக் அம்பயர் வேலை தான். ஆனால் தவறாக காந்தே வழங்கினார். அதற்காக தோனி மைதானத்துக்கு வந்து வாக்கு வாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதிகாரம் இல்லை

அதிகாரம் இல்லை

இதுபோன்று நடுவரிடம் நேராக வந்து பேசுவது அவர் வேலையில்லை. அவருக்கு அதிகாரமும் இல்லை. அது தவிர தோனி இப்படி நடந்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை, இந்த விவகாரத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் குறைவு என்று கூறினார்.

Story first published: Friday, April 12, 2019, 23:55 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+