Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100வது வெற்றியை மாலையாக்கி, உலகின் 3வது தலை சிறந்த கேப்டனாக மகுடம் சூடினார் டோணி!

மெல்போர்ன்: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி டோணி தலைமையில், இன்று 100வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவை தவிர்த்து, இந்த சாதனையை பெறும் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

உலக கோப்பை காலிறுதியில் இன்று வங்கதேசத்தை, டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தியது. இது டோணி தலைமையிலான அணியின் 100வது வெற்றி என்பது சிறப்பு.

டோணி சாதனை

டோணி சாதனை

177வது போட்டியில் இந்த சாதனை வெற்றி டோணி தலைமையிலான அணிக்கு கிடைத்துள்ளது. 100 போட்டிகளில் டோணி தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 62 போட்டிகளில் மட்டும் தோற்றுள்ளது. 4 போட்டிகள் டையில் முடிந்துள்ளன. 11 போட்டிகளுக்கு முடிவு தெரியவில்லை. டோணி தலைமையிலான அணியின் வெற்றி விழுக்காடு, 60 சதவீதமாக உள்ளது.

முதலிடத்தில் பாண்டிங்

முதலிடத்தில் பாண்டிங்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்திலுள்ளார். 230 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக செயல்பட்டு இந்த வெற்றிகளை ஈட்டினார். பாண்டிங் அணி 51 போட்டிகளில் தோற்றுள்ளது. 2 போட்டிகள் டை ஆன நிலையில், 12 போட்டிகளில் முடிவு தெரியவில்லை. பாண்டிங் அணியின் வெற்றி சதவீதம் 76 ஆக உள்ளது. ஆடும், முக்கால்வாசி போட்டிகளில் அந்த அணிதான் வெற்றி பெற்றுள்ளது.

பார்டர்

பார்டர்

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 2வது இடத்திலுள்ளார். 178 போட்டிகளில் ஆடி, 107 வெற்றிகளை அவரது தலைமையிலான ஆஸி. அணி பெற்றுள்ளது. 67 போட்டிகளை தோற்றுள்ளது. 1 போட்டி டை ஆகியுள்ளது. 3 போட்டிகளில் முடிவில்லை. வெற்றி சதவீதம் 61.

தென் ஆப்பிரிக்க கேப்டன்

தென் ஆப்பிரிக்க கேப்டன்

டோணிக்கு அடுத்த இடத்தில், அதாவது 4வது இடத்தை, தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனான மறைந்த ஹன்சி குரோனே பிடித்துள்ளார். அவரது தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, 138 போட்டிகளின் மூலம் 99 வெற்றிகளை ஈட்டி அசத்தியது. 35 போட்டிகளில் மட்டுமே தோற்றது. 1 போட்டி டை ஆனது. 3 போட்டிகளில் ரிசல்ட் கிடைக்கவில்லை. வெற்றி சதவீதம் 73 ஆக இருந்தது.

ஆஸி.க்கு வெளியே ஒரு வெளிச்சம்

ஆஸி.க்கு வெளியே ஒரு வெளிச்சம்

தனது அணிக்கு, 100 வெற்றிகளை ஈட்டித் தந்த ஆஸ்திரேலியர் அல்லாத ஒரே கேப்டன் டோணிதான்.

Story first published: Friday, March 20, 2015, 8:47 [IST]
Other articles published on Mar 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+