ஐபிஎல்லின் கிங் யாரு தெரியுமா? கூகுள் சொன்ன பதிலை பாருங்க... குஷியாகி விடுவீங்க...!
Recommended Video
மும்பை:ஐபிஎல் தொடரின் கிங் யார் என்று கூகுளில் தேடினால் தோனி தான் என்று பதில் வருவதால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர்.
இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வெற்றிகரமான கிரிக்கெட் தொடர் என்ற பெயரையும் ஐபிஎல் பெற்று விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நடத்தி வருகிறது.
இந்த தொடரில் இடம்பெறும் அணிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். எந்த வீரர் எங்கு விளையாடினாலும்... இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் ஒரே ஒரு அணியை தான் அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகின்றனர். அவர்களது ரசிகர்களாக மாறி இருக்கின்றனர்.

கிரிக்கெட் உலகம்
அது வேறு எந்த அணியும் அல்ல.. தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தோனி வந்தால் போதும்... கிரிக்கெட் உலகமே அதிரும் என்று அவரது புகழ் பாடும் அளவுக்கு ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்ல போனால் தோனியின் கேப்டன்சி, அவரது ஆட்டத்தை பார்ப்பதற்கே என்று தனி ரசிகர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

தோனியின் பெருமை
மைதானத்தில் நிதானம், சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறமை, இளம் வீரர்களை அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு என்று சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய வீரருக்கு மென்மேலும் பெருமையையும், புகழையும் சேர்க்கும் விதமாக கூகுள் ஒரு விஷயத்தை செய்திருக்கிறது.

ரசிகர்கள் உற்சாகம்
தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியானது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. உலகம் எங்கும் உள்ள சென்னை அணி ரசிகர்கள், தோனி படையினர் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் விதமாக ஒரு முக்கிய செய்தி.

தோனி தான் கிங்
தல தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மகுடம் வைக்கும் விதமாக கூகுள் ஒரு முக்கியமான ஒன்றை செய்திருக்கிறது. கூகுளின் search boxல் சென்று who is the jing of Ipl என்று டைப் செய்தால் அதற்கு மகேந்திர சிங் தோனி என்று பதில் வருகிறது.

ரசிகர்கள் குதூகலம்
தல தோனியின் பெருமைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இது அமைந்திருப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது வேறு எந்த நபருக்கும் கிடைக்காத கவுரவம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications