ரன்தான் கம்மி.. ரசிகர்கள் நெஞ்சில் டோணிதான் கில்லி.. சோஷியல் மீடியாவில் டாப் 1 'தல'தான்!
புனே: என்னதான் நடப்பு 10 ஐபிஎல் போட்டிகளில் வெறும் 199 ரன்களை மட்டுமே டோணி சேர்த்திருந்தாலும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரை பற்றிதான் அதிக அளவில் ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.
டோணிக்கு எப்போதுமே இந்திய அளவில் ரசிகர்கள் அதிகம். அவரின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரசிகர்களை ஈர்த்த அணியாக திகழ்ந்து வந்தது.
தற்போது ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட் அணிக்காக, ஆடிவரும் டோணி, முந்தைய சீசனில் அந்த அணி கேப்டனாகவும் செயல்பட்டார். ஆனால், சிறப்பாக ஆடாத அந்த அணி தொடரை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

புனே சீற்றம்
நடப்பு சீசனில், இளம் வீரர்கள் பக்கபலத்தோடு, புனே அணி சிறப்பாக ஆடி வருகிறது. முதல் சில ஆட்டங்களில் தடுமாறிய புனே, தற்போது, சிஎஸ்கே பாணியில் எதிரணிகளை துவம்சம் செய்ய ஆரம்பித்துள்ளது.

டோணி இன்னும் அடிக்கலாம்
இருப்பினும் டோணி பேட்டிங் பெரிய அளவுக்கு எடுபடவில்லை. ஒரு அரை சதம் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி விளாசியுள்ளார் டோணி. நடப்பு தொடரில் 10 போட்டிகளில் 199 ரன்களை டோணி சேகரித்துள்ளார்.

ரசிகர்களிடம் கிங்
அதேநேரம், டிவிட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஐபிஎல் வீரர் டோணிதான். புதிதாக டிவிட்டரில் ஒரு எமோஜி வசதி வந்துள்ளது. அதன்படி, வீரர்கள் பெயரை குறிப்பிட்டால் அவர்களின் புகைப்படமும் கூடவே வரும். இப்படி ஹேஷ்டேக் மூலம் விவாதிக்கப்பட்ட வீரர்களில் டோணிக்கு முதலிடம்.

கோஹ்லி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு மூன்றாவது இடம். மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா 4வது இடத்திலும், புனே ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.

மும்பை
அதேநேரேம், அணிகள் அடிப்படையில் பார்த்தால், மும்பை அணி அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் குஜராத் அணிகள் நடுவேயான சூப்பர் ஓவரின்போது டிவிட்டரில் அதிக ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஃபார்ம் என்பது தற்காலிகமானது, கிளாஸ் என்பது நிரந்தரமானது, என்ற வாக்கியம் கிரிக்கெட் உலகில் பிரபலம். டோணியை ஒரு கிளாஸ் வீரராகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவரது ஃபார்ம் மோசமாக இருப்பதை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications