Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட.. என்ன ஸ்டைல்.. புயலாய் வந்து இறங்கிய தோனி.. ஒரு மாதத்திற்கு பிறகு இந்தியா வந்த தல

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு தாயகம் திரும்பினார்.

Mahendra singh dhoni returns to india after a month

கடந்த மாத இறுதியில் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து சென்ற தோனி, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிறகு, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்ற இந்திய அணியை நேரில் சென்று சந்தித்த தோனி, தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.

இதனால் தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிக்காக தொடர்ந்து பயிற்சியில் இருந்த தோனி, குடும்பத்துடன் நேரத்தை செலவிட செய்வதற்காகவே இங்கிலாந்து சென்றார். மேலும் தோனிக்கு காலில் காயம் இருந்ததால், அதற்கு அவர் சிகிச்சை எடுக்க சென்றதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்தியா திரும்பியுள்ள தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தென்னாப்பிரிக்காவில் வாங்கியுள்ள அணியை கட்டமைக்க நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது.ஒரு வேலை பிசிசிஐ அனுமதி அளித்தால், தோனி அதிலும் விளையாடலாம்.

தோனி ஓய்வு பெற்றுவிட்டதால், அனுமதி தேவையில்லை என்றாலும், வாய் மொழி உத்தரவாக, இது வரை எந்த முன்னாள் வீரர்களும் வெளிநாட்டு தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், தோனியின் அடுத்த 3 மாதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதற்கு தான் தோனி இந்த விடுமுறையை எடுத்து கொண்டு இந்தியா திரும்பியதாக தெரிகிறது.

Story first published: Monday, August 1, 2022, 9:44 [IST]
Other articles published on Aug 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+