Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை விட மாட்டோம்ணே.. விரும்புற வரைக்கும் இருக்கலாம்.. காசி கொடுத்த சூப்பர் மெசேஜ்!

சென்னை : தோனி தான் நினைக்கும்வரையில் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடலாம் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

CSK அணிக்காக தோனிக்கு விருப்பம் இருந்தால் ஆடுவார்: காசி விஸ்வநாதன் தகவல்

வரும் 2021 ஐபிஎல்லுக்கு பிறகு கூட தோனியை சிஎஸ்கே அணியில் நீட்டிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது போல, சிஎஸ்கே அணியிலிருந்தும் அவர் விலக மாட்டார் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 கோப்பை வெற்றி

3 கோப்பை வெற்றி

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அந்த அணிக்காக இதுவரை 3 கோப்பைகளை வென்றுள்ளார். அவருடைய கேப்டன் கூல் நடவடிக்கை, அணியின் சிறப்பான திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அணியை சிறப்பாக வழிநடத்த உதவி வருகிறது.

 சிஎஸ்கேவை விட்டு விலக மாட்டார்

சிஎஸ்கேவை விட்டு விலக மாட்டார்

இதனிடையே, அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரிடையர்மெண்ட் பெறுவது தோனியின் சொந்த முடிவு என்றும், அதில் சிஎஸ்கே அணி தலையிடாது என்றும் கூறியுள்ளார். அதேபோல அவர் சிஎஸ்கே அணியை விட்டு விலக மாட்டார் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

காசி விஸ்வநாதன் திட்டவட்டம்

காசி விஸ்வநாதன் திட்டவட்டம்

தோனி தான் நினைக்கும் காலம் வரையில் சிஎஸ்கே அணியில் பங்கேற்று விளையாடலாம் என்றும் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தற்போது தோனி உள்ளிட்ட சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வரும் 21ம் தேதி அணி வீரர்கள் சார்ட்டர்ட் விமானம் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அமைதியான தோனி

அமைதியான தோனி

தொடர்ந்து பேசிய காசி விஸ்வநாதன், வரும் 2021 ஐபிஎல்லுக்கு பிறகும் தோனியை சிஎஸ்கேவில் நீட்டிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை தோனி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடிய நிலையில், அவரது ரிடையர்மெண்ட் குறித்த அறிவிப்பை தாங்கள் மீடியாவை பார்த்தே தெரிந்து கொண்டதாகவும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

அவரது முடிவு தனக்கு அதிர்ச்சி அளித்தாலும், தோனி எப்போதும் போலவே அமைதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, August 17, 2020, 15:59 [IST]
Other articles published on Aug 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+