Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் காலில் விழுந்த ஜெராக்ஸ் வீரர்.. அப்புறம் நடந்த டிவிஸ்ட்.. தமிழன்னு நிரூபிச்சிட்டாரு !

நாக்பூர் : இந்தியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி தமிழக வீரர் அஸ்வினை பார்த்து தான் மிகவும் பயப்படுகிறது. காரணம் அஸ்வின் இடது கை பேட்ஸ்மினுக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர்.

கடந்த முறை ஆஸ்திரேலியா தொடரில் கூட அஸ்வின் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித்தை அபாரமாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி நெருக்கடிக்கு ஆளாக்கினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி அஸ்வினை போல் பந்து வீசும் மகேஷ் பித்தியா என்ற சுழற் பந்துவீச்சாளரை கண்டுபிடித்து அவரை வலைப் பயிற்சியில் பந்து வீசும் வீரராக சேர்த்துக் கொண்டுள்ளது.

அஸ்வின் செயல்

அஸ்வின் செயல்

இதனை அடுத்து மகேஷ் பித்தியா மிகவும் பிரபலமானார். காரணம் அவர் அஸ்வினை போல் அச்சு அசலாக பந்து வீசும் திறமையை கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் மகேஷ் பித்தியா, பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அஸ்வின் அங்கு வந்துள்ளார். அப்போது ஓடி சென்ற மகேஷ் பித்தியா அஸ்வினின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். உடனே இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அஸ்வின் காலில் விழுந்த மகேஷ் பித்தியாவை தூக்கி நிறுத்தி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அஸ்வின் கேட்டார்

அஸ்வின் கேட்டார்

மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி கையை உயர்த்தி காட்டி மகேஷ் பித்யாவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு குறித்து செய்தியாளரிடம் பேசிய மகேஷ் பித்யா, நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவரை இன்று சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். ஆனால் அவர் என்னை கட்டி அணைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். பிறகு நான் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எந்த மாதிரி பந்து வீசினேன் என்று கேட்டுக்கொண்டார்.

கோல்டன் சான்ஸ்

கோல்டன் சான்ஸ்

நான் ரஞ்சி கிரிக்கெட்டில் தற்போது தான் விளையாடி வருகின்றேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என நான் முயற்சி செய்து வருகின்றேன். அதுக்கு முதல் படியாக பரோடா அணியில் என்னுடைய இடத்தை உறுதி செய்ய நான் கடுமையாக உழைத்து வருகின்றேன். ஐ பி எல் குறித்து எல்லாம் நான் இப்போது யோசிக்கவே இல்லை என்று மகேஷ் பித்தியா கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா அணி தம்மை அழைத்ததும் இந்த வாய்ப்பை வீணடிக்க கூடாது என்று தான் உடனே சென்று விட்டதாக கூறியுள்ளார்.

6 முறை அவுட்

6 முறை அவுட்

மேலும் பயிற்சி முகாமில் முதல் நாளில் ஸ்டீவன் ஸ்மித்தை ஆறு முறை ஆட்டமிழக்க வைத்ததாக மகேஷ் பித்தியா கூறியுள்ளார்.எந்த மாதிரி பந்து நீங்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வீசினீர்கள் என்று கேள்விக்கு பதில் அளித்த மகேஷ் பித்தியா தாம் அஸ்வின் போல் கேரம் பந்து எல்லாம் வீசத் தெரியாது. நான் ஆப் ஸ்பின்னை வீசும் போது அது அஸ்வின் சாயல் போல் இருக்கும். ஆஸ்திரேலியா அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது என்னுடைய வாழ்க்கையில் நான் மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன்.

லயான் கொடுத்த அட்வைஸ்

லயான் கொடுத்த அட்வைஸ்

இது என் வாழ்க்கையை மாற்றிய அனுபவமாக இருக்கிறது. பயிற்சியின்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான லயான் என்னிடம் வந்து பந்தை எப்படி பிடித்து வீச வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். நான் ஆஸ்திரேலியா அணியுடன் பிப்ரவரி 17ஆம் தேதி வரை இருப்பேன். அதன் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது என்று மகேஷ் பித்தியா தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, February 7, 2023, 22:59 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+