ஒருநாள் போட்டியில் 100 ஸ்டம்பிங்... சங்ககாரா சாதனையை முறியடித்து டோணி அசத்தல்!
கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோணி ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் ஆர் பிரேமதாஸா மைதானத்தில் இலங்கைக்கு எதிராக கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தனன்ஜெயை ஸ்டம்ப் அவுட் செய்தார். இது டோணிக்கு 301-ஆவது ஒரு நாள் போட்டியாகும்.

இதன் மூலம் விக்கெட் கீப்பராக உள்ள டோணி இதுவரை கலந்து கொண்ட ஒரு நாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிக் செய்து சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை வீரர் சங்ககரா 99 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்திருந்தார்.
அதை டோணி முறியடித்துவிட்டார். இதன் மூலம் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் டோணி
Story first published: Sunday, September 3, 2017, 19:03 [IST]
Other articles published on Sep 3, 2017


Click it and Unblock the Notifications