Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவோட எதிர்காலம்... முதல் டெஸ்ட் அரைசதம்... கேமரான் கிரீன் அபாரம்

சிட்னி : இந்தியாவிற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி யை துவங்கியுள்ளார் கேமரான் கிரீன்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் நடைபெற்றுவரும் 3வது டெஸ்ட் போட்டியில் தற்போது தன்னுடைய முதல் அரைசதத்தை அடித்துள்ளார்.

சர்வதேச அளவில் தரமான பௌலிங்கை வெளிப்படுத்திவரும் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை அவர் துவங்கியுள்ளார்.

வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு

வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது இன்னிங்சில் 407 என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரான் கிரீன் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

மெருகேற்றிவரும் கிரீன்

மெருகேற்றிவரும் கிரீன்

4 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொண்ட கிரீன், போட்டிக்கு போட்டி தன்னை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த இரண்டாவது இன்னிங்சில் தனது அரைசதத்தை அவர் அடித்துள்ளார்.

ஐபிஎல் 2021ல் கவனம்

ஐபிஎல் 2021ல் கவனம்

ஆயினும் இந்த அரைசதத்தையும் டி20 போட்டிகளை போல அதிரடியாக முடித்துள்ளார். மைதானத்தில் சிக்ஸ்கள் பறந்தன. ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான ஏலம் வரும் மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கேமரான் கிரீன் அதில் முக்கிய கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்கிராத் கருத்து

மெக்கிராத் கருத்து

தற்போதைய இந்தியா -ஆஸ்திரேலியா தொடரில் அவரது ஆட்டம் இதற்கு காரணமாக அமையும் என்று இன்றைய போட்டியில் வர்ணனை மேற்கொண்ட முன்னாள் வீரர் க்ளென் மெக்கிராத் இதனை குறிப்பிட்டு கூறியுள்ளார். சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் புதிய மற்றும் திறமையான வீரர்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஐபிஎல் 2021 ஏலத்தின்போது இவருக்கு பலத்த போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, January 10, 2021, 14:52 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+