
டாஸ்
இந்த நிலையில், மெல்போர்ன் அடுகளத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்டை அணியில் ரோகித் சர்மா பேசியுள்ளார், இது குறித்து பேசிய அவர், அரையிறுதி சுற்றுக்கு முன்பு ரிஷப் பண்ட் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா கூறினார்.

யுத்திகள் மாறவில்லை
ஜிம்பாப்வே உள்ளிட்ட எந்த அணியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்து, பந்துவீச்சாளர்கள் இலக்கை தற்காத்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்க தான் முதலில் பேட்டிங் செய்வதாக ரோகித் கூறினார். இந்த போட்டிக்காக பெரிய அளவில் யுத்திகளை மாற்றவில்லை என்றும் ரோகித் கூறினார்.

பந்துவீச விரும்பினோம்
இதனைத் தொடர்ந்து பேசிய ஜிம்பாப்வே கேப்டன் எர்வின், நேற்று மாலை நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால், முதலில் பந்துவீச தான் நாங்கள் இருந்தோம் என்று கூறினார். இன்றைய ஆட்டத்தில் 2 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பதாக அவர் கூறினார். இதுவரை இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் 7 முறை வென்றுள்ளன. இதில் இந்தியா 5 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வென்றுள்ளது.

இந்தியா பிளேயிங் லெவன்
1. ரோகித் சர்மா, 2. கே.எல். ராகுல், 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. ரிஷப் பண்ட் , 7. அக்சர் பட்டேல், 8. அஸ்வின், 9. புவனேஸ்வர் குமார், 10. முகமது ஷமி, 11. ஆர்ஸ்தீப் சிங்


Click it and Unblock the Notifications











