
தீயணைப்பு துறை தகவல்
ஸ்ரீசாந்த் வீட்டில் தீ எரிவதை கண்ட அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். திருக்காக்கரா மற்றும் காந்திநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அறைகள் தீக்கிரை
அவர்கள் முதல் தளத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு அறைகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர்.

உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்
ஏணி மூலம் ஸ்ரீசாந்தையும், அவரது குடும்பத்தினரையும் தீயணைப்பு துறையினர் மீட்டர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுட்கால தடை
ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றபோது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம், அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆயுட்கால தடை விதித்தது.

விளையாட அனுமதி
சமீபத்தில்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தடையை 7 ஆண்டுகளாக குறைத்தது. இதையடுத்து ஸ்ரீசாந்த் 2020-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவரது வீட்டில் தீ விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











