Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் விதிகளில் அதிரடி மாற்றம்.. தோனி உள்ளிட்ட கேப்டன்களுக்கு அடித்த லக்.. பிசிசிஐயின் பலே ஏற்பாடு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டன.

இன்னும் சில வீரர்கள் இந்த வார இறுதியில், ஐபிஎல் அணிகளில் வந்து சேர்ந்துவிடுவார்கள். இந்த நிலையில், பிசிசிஐயின் தொழில்நுட்ப கமிட்டி நேற்று கூடியது.

இதில் ஐபிஎல் போட்டிக்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்து ஐபிஎல் அணிகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதி

கொரோனா விதி

கொரோனாவால் போட்டி தடைப்படாமல் இருக்க பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட தகுதியுடைய 12 பேர் இருந்தால் நிச்சயம் போட்டி நடைபெறும். 12 பேரை ஒரு அணியால் களமிறக்க முடியவில்லை என்றால் அந்த போட்டியை பின்னாளில் நடத்த முடியுமா என்று பிசிசிஐ ஆலோசனை செய்யும். அப்படி முடியாத பட்சத்தில் எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

புதிய பேட்ஸ்மேன்

புதிய பேட்ஸ்மேன்

இதே போன்று ஓவரின் கடைசி பந்தை தவிர, மற்ற சமயங்களில் பேட்ஸ்மேன்கள் கேட்ச் ஆகும், களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் தாண்டினாலும் இனி புதிய பேட்ஸ்மேன்கள் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார். இந்த விதிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு இறுதியில் தான் அமலுக்கு வருகிறது. ஆனால் இது ஐபிஎல் தொடரில் கடைபிடிக்கப்பட உள்ளது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

இதே போன்று லீக் போட்டியில், ஆட்டம் சமனில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் வீசப்படும். ஆனால் சூப்பர் ஓவர் வீச போதிய நேரமில்லை., அதற்கான சூழல் இல்லை என்றால் இனி புள்ளி பட்டியலில் எந்த அணி மேலே இருக்கிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உதாரணத்துக்கு சென்னை 3வது இடத்திலும், மும்பை 4வது இடத்திலும் இருந்து போட்டி டிராவாகி சூப்பர் ஓவர் வீச முடியவில்லை என்றால் சென்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

Recommended Video

IPLக்கு Whistle Podu Epi 01: Team Hotels of all franchises in Mumbai | IPL 2022 | OneIndia Tamil
டி.ஆர்.எஸ்

டி.ஆர்.எஸ்

ஐபிஎல் போட்டியின் முடிவை மாற்றுவது நடுவர்களின் தவறான முடிவு தான். இதனை தடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டியில் இனி ஒரு டி.ஆர்.எஸ்க்கு பதிலாக இனி 2 டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படடுள்ளது. இதன் மூலம் நடுவரின் தவறான முடிவை திருத்த முடியும். தோனி போன்ற கேப்டன்களுக்கு இந்த முடிவு கைக் கொடுக்கும்.

Story first published: Tuesday, March 15, 2022, 16:35 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+