Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!

பொக்காரா : மாலத்தீவு மகளிர் அணி தொடர்ந்து பரிதாபமான முறையில் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.

இந்த முறை மீண்டும் நேபாள மகளிர் அணியிடம் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்து வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்த மாலத்தீவு மகளிர் அணி, நேபாள மகளிர் அணியிடம் படுதோல்வி அடைந்து பரிதாபத்தை சந்தித்தது.

தெற்காசிய மகளிர் சாம்பியன்ஷிப் டி20 தொடர் நேபாளத்தின் பொக்காரா நகரில் நடைபெற்று வருகிறது.

8 ரன்கள்

8 ரன்கள்

இந்த தொடரில் மாலத்தீவு மகளிர் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தன் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக 16 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி, இந்த முறை வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டக் அவுட் ஆனார்கள்

டக் அவுட் ஆனார்கள்

அந்த 8 ரன்களில் 7 ரன்கள் வைடு பந்துகள் மூலம் கிடைத்தவை. ஒரே ஒரு மாலத்தீவு வீராங்கனை மட்டும் 1 ரன் எடுத்தார். மற்ற 9 வீராங்கனைகள் டக் அவுட் ஆகி பரிதாபத்தை சந்தித்தனர்.

4 விக்கெட்கள் வீழ்த்திய அஞ்சலி

4 விக்கெட்கள் வீழ்த்திய அஞ்சலி

முதல் சந்திப்பில் மாலத்தீவு அணியின் 6 விக்கெட்களை ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் வீழ்த்தி உலக சாதனை செய்த அஞ்சலி சந்த், இந்தப் போட்டியில் 1 ரன் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

16 பந்துகள் சந்தித்தார்

16 பந்துகள் சந்தித்தார்

11.3 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த மாலத்தீவு அணி 8 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சூனா மரியம் 16 பந்துகள் சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதுதான் அந்த அணியில் ஒருவர் சந்தித்த அதிக பந்துகள் ஆகும்.

மோசமான தோல்விகள்

மோசமான தோல்விகள்

அடுத்து ஆடிய நேபாள அணி 1.1 ஓவரில் 9 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. மாலத்தீவு அணி, நேபாள அணிக்கு எதிரான இரு போட்டிகள் மட்டுமல்லாது, மற்ற அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்தது.

இலங்கை அணிக்கு எதிராக..

இலங்கை அணிக்கு எதிராக..

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 279 ரன்கள் விட்டுக் கொடுத்து, வெறும் 30 ரன்கள் எடுத்து 249 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மாலத்தீவு அணி.

வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி

வங்கதேச அணிக்கு எதிராக தோல்வி

மாலத்தீவு அணி அடுத்த போட்டியில் வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக 255 ரன்கள் விட்டுக் கொடுத்தது. அடுத்து சேஸிங்கில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தப் போட்டியிலும் 249 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, December 7, 2019, 21:28 [IST]
Other articles published on Dec 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+