Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இப்படிலாம் கூட நடக்குமா.. 9 பேர் டக் அவுட்.. 9.4 ஓவரில் முடிந்த போட்டி.. 6 ரன்னில் சுருண்ட அணி!

மாலி: டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறாக வெறும் 6 ரன்களுக்கு மொத்த அணியும் அவுட்டான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.

உலகம் முழுக்க கிரிக்கெட் போட்டி இப்போது வைரலாகி வருகிறது. கால்பந்து போட்டிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் போட்டி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

இப்படி கிரிக்கெட் வைரலாக முக்கிய காரணங்களில் ஒன்று டி 20 கிரிக்கெட் போட்டிகள்தான். ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் அதிகமாக டி20 கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறார்கள்.

ஐசிசி

ஐசிசி

இந்த நிலையில் ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளை பெண்கள் மத்தியில் பிரபலப்படுத்த உலகம் முழுக்க சிறிய நாடுகளுக்கு இடையில் டி20 போட்டி நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சின்ன நாடான மாலியில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இரண்டு அணிகள்

இரண்டு அணிகள்

மாலி பெண்கள் அணியும், ருவாண்டா பெண்கள் அணியும் இந்த டி 20 போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமாக சென்றது. மாலி அணியின் தொடக்க வீராங்கனை மரியம் சமாங்கே மட்டும் அந்த அணியில் ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.

எல்லோரும் அவுட்

எல்லோரும் அவுட்

அதன்பின் களமிறங்கிய மாலி அணி வீராங்கனை எல்லோரும் வரிசையாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். மொத்தமாக 9.4 ஓவரில் அந்த அணி மொத்தமாக அவுட்டானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த அணி மொத்தமாக எடுத்ததே 6 ரன்கள்தான்.

மிக மோசம்

மிக மோசம்

அதிலும் அந்த அணியில் இருந்து வீராங்கனைகள் 9 பேர் டக் அவுட்டானார்கள். ஒரே ஒரு ரன் மட்டும்தான் ஓடி எடுக்கப்பட்டது. மீதம் உள்ள ரன்கள் எல்லாம் வைட் மூலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் வெற்றி

சூப்பர் வெற்றி

இதை எளிதாக ருவாண்டா அணி அடித்து வென்றது. இதன் மூலம் ஐசிசி டி20 பெண்கள் போட்டியில் மாலி அணி புதிய மோசமான சாதனை படைத்து இருக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக சீனா எடுத்திருந்த 14 ரன்கள் ஸ்கோர்தான் மிக குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 19, 2019, 13:43 [IST]
Other articles published on Jun 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+