கடைசி பந்தில் விக்கெட்.. கும்ப்ளே ரெக்கார்டு முறியடிப்பு.. சிரித்த முகத்துடன் விடை பெற்ற மலிங்கா!
Recommended Video
கொழும்பு : இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்த லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
வங்கதேச அணிக்கு எதிரான இலங்கை அணியின் முதல் ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றார். தன் கடைசி போட்டியிலும் சிறப்பாக ஆடிய மலிங்கா, கடைசி பந்தில் விக்கெட் எடுத்து அசத்தினார்.
வங்கதேச அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மலிங்காவை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தது இலங்கை அணி. கொழும்பு : இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்த லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
வங்கதேச அணிக்கு எதிரான இலங்கை அணியின் முதல் ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றார். தன் கடைசி போட்டியிலும் சிறப்பாக ஆடிய மலிங்கா, கடைசி பந்தில் விக்கெட் எடுத்து அசத்தினார்.
வங்கதேச அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மலிங்காவை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தது இலங்கை அணி.

துல்லியம்
களத்தில் மலிங்கா எப்போதும் சிரித்த முகத்துடன் தான் காட்சி அளிப்பார். தன் கடைசி போட்டிக்கு பின்பும் அதே சிரித்த முகத்துடன் தான் இருந்தார். கடைசி போட்டி என்றாலும், அதே துல்லியம், மின்னல் வேகம் என எதிலும் குறை வைக்காமல் அசத்தினார்.

இலங்கை பேட்டிங்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 314 ரன்கள் குவித்தது. குசால் பெரேரா 111 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருந்தார். மென்டிஸ் 43, ஏஞ்சலோ மாத்யூஸ் 48 ரன்கள் எடுத்தனர்.

முதல் ஓவரில் விக்கெட்
அடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சை வழக்கம் போல மலிங்கா முன்னணியில் நின்று வழி நடத்தினார். வங்கதேச இன்னிங்க்ஸின் முதல் ஓவரை வீசிய மலிங்கா, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் துவக்க வீரர் தமிம் இக்பால் விக்கெட் எடுத்து மிரட்டல் துவக்கம் அளித்தார்.

இரண்டு விக்கெட்கள்
மற்றொரு துவக்க வீரர் சௌம்யா சர்க்கார் விக்கெட்டையும் அவரே வீழ்த்தினார். இரண்டுமே யார்க்கர் பந்தில் கிடைத்த பவுல்டு அவுட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து முஷ்பிகுர் ரஹீம், சபீர் ரஹ்மான் அரைசதம் அடித்து வெற்றிக்கு போராடினர். எனினும், அவர்கள் பாதியிலேயே ஆட்டமிழந்தனர்.

தோல்வி
மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப வங்கதேசம் தோல்வியை நோக்கி பயணித்தது. 42வது ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரின் நான்காம் பந்தில் வங்கதேச அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மலிங்கா பந்துவீச்சு
தன் கடைசி போட்டியில் 9.4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் மலிங்கா. இதில் இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும். 226 போட்டிகளில் 338 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் மலிங்கா.

கும்ப்ளேவை முந்தினார்
தன் கடைசி போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை வீழ்த்தி, ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். அனில் கும்ப்ளே 337 ஒருநாள் போட்டி விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

டி20களில் ஆடுவார்
ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளார் மலிங்கா. எனவே, டி20 போட்டிகளில் மலிங்காவை தொடர்ந்து காணலாம். ஒருநாள் அரங்கில் மலிங்காவின் இடத்தை ஈடுகட்ட இலங்கை அணியில் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications