Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சீவ் கோயங்காவின் மான்செஸ்டர் சூப்பர்ஜெயன்ட்ஸ் கோப்பை வென்றது.. தி ஹண்ட்ரட் பைனலில் அபாரம்

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 'தி ஹண்ட்ரட்' 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மான்செஸ்டர் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. சஞ்சீவ் கோயங்காவுக்குச் சொந்தமான மான்செஸ்டர் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி, ஜோஸ் பட்லர் தலைமையில் ஆடி கோப்பையை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணி, மான்செஸ்டர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 100 பந்துகளின் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராக்கெட்ஸ் அணியில் அதிகபட்சமாக அநியூரின் டொனால்ட் 38 ரன்களும், லூயிஸ் ஜார்ஜி 32 ரன்களும், பென் டக்கெட் 31 ரன்களும் எடுத்தனர். மான்செஸ்டர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், சன்னி பேக்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ரன் குவிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தினர். ஜோஸ் டங், லியாம் டாசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Manchester Supergiants Win The Hundred 2026 Title Beat Trent Rockets by 5 Wickets at Lord s

தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மான்செஸ்டர் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி, ஆட்டத்தின் 98வது பந்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் அணியின் தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அவர் 38 பந்துகளில் 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியூஸ் டு ப்ளாய் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்களும், பால் வால்டர் 22 ரன்களும் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். ட்ரென்ட் ராக்கெட்ஸ் தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளையும், கால்வின் ஹாரிசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதற்கு முன்பு 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மான்செஸ்டர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால், இந்த முறை சூப்பர்ஜெயன்ட்ஸ் என்ற புதிய பெயருடன் ஆடிய முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

Story first published: Monday, August 17, 2026, 8:04 [IST]
Other articles published on Aug 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+