சேலையில் கொடி-மன்னிப்பு கேட்ட மந்திரா
டெல்லி:உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் பங்கேற்ற 16 நாடுகளின் தேசியக் கொடியும் இடம் பெற்றிருப்பது போல டிசைன் செய்யப்பட்ட சேலையை அணிந்ததற்காக டிவி தொகுப்பாளர் மந்திரா பேடி மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது அணிகளை விட, வீரர்களை விட, அந்த நிகழ்ச்சியை டிவியில் தொகுத்து வழங்கிய மந்திரா பேடிதான் அனைவரையும் கவர்ந்தார். படு கிளாமராக டிரஸ் போட்டு வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கலக்கினார்.
![]() |
குறிப்பாக ஒரு முறை முன்னழகு முழுவதுமாக தெரியும் வகையில் படு கிளாமராக டிரஸ் அணிந்து அவர் வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் டிரஸ்ஸில் கொஞ்சம் பச்சையைக் குறைத்துக் கொண்டார் பேடி.
இந்த முறையும் கலக்கத் தவறவில்லை பேடி. டிவியில் போட்டிகளைப் பார்த்தவர்கள், போட்டியை விட பேடியைத்தான் அதிகம் கவனித்தனர்.
காரணம், மந்திரா பேடி, அணிந்து வந்த வித்தியாசமான ஜாக்கெட்டும், சேலையும்தான். இந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியின்போது, அதை நேரடியாக ஒளிபரப்பிய சோனி மேக்ஸ் டிவியில், படு வித்தியாசமான ஒரு சேலையை அணிந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருந்தார் பேடி.
![]() |
அதாவது உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொண்ட 16 அணிகளின் தேசியக் கொடியும் அவரது சேலையில் இடம் பெற்றிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த சேலையில் வந்திருந்த பேடி, ஆஸ்திரேலியாவின் இன்னிங்க்ஸ் முடிந்து லஞ்ச் பிரேக் விட்டபோது சேலையை மாற்றிக் கொண்டு வந்தார்.
அதற்கு என்ன காரணம் என்பதையும் அவரே விளக்கினார். எனது கணவர் என்னைத் தொடர்பு கொண்டு நான் தேசியக் கொடிகள் அடங்கிய சேலையுடன் வந்தது சிலரின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக தனக்கு தகவல் வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அதற்கு மதிப்பு கொடுத்து எனது சேலையை மாற்றி விட்டேன்.
தேசியக் கொடிகள் அடங்கிய சேலையை நான் அணிந்து வந்தது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை.
இந்தியப் பெண்ணாக இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்தியக் கொடிக்கு அவமரியாதை தேடிக் கொடுக்கும் எண்ணத்துடன் நான் இந்த சேலையை அணியவில்லை என்றார் மந்திரா பேடி.
முன்னதாக இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அதை சேலையில் டிசைன் செய்து மந்திரா பேடி அணிந்து வந்தது இந்தியாவில் பெரும் டென்ஷனை ஏற்படுத்தி விட்டது.
பல்வேறு டிவி சேனல்களிலும் பேடியைத் திட்டி நேயர்கள் கருத்து தெரிவித்தனர். பேடி அணிந்திருந்த சேலையில் இந்திய தேசியக் கொடி, அவரது முழங்காலுக்கு சற்று மேலே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications

