Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜட்டு- அஸ்வினுக்கு ஜாக்பாட் வாய்ப்பு.. எல்லாம் சாஸ்திரி கையில் தான் இருக்கு.. முன்னாள் வீரர் அட்வைஸ்

மும்பை: இந்திய அணியின் ஸ்பின்னிங் ஜோடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடியில் கலக்கவிருப்பது கோலி மற்றும் ரவிசாஸ்திரி கையில் தான் உள்ளது என முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளர்.

கடந்த சில நாட்களாக டெஸ்ட் சாம்ப்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்த பேச்சுக்கள் அதிகளவில் இணையத்தில் உலா வருகிறது. இந்தியா - நியூசிலாந்து மோதும் இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக தற்போதே போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் பிட்ச் மற்றும் நிலைமை குறித்து ரசிகர்கள் ஆராய தொடங்கிவிட்டனர்.

 ஏஜஸ் பவுல்

ஏஜஸ் பவுல்

இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு டுயூக் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. ரோஸ் பவுல் மைதானத்தில் பந்துக்கு நல்ல ஸ்விங் மற்றும் வேகம் கிடைக்கும். இதன் காரணமாக இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களிடையே கடும் போர் நிகழவுள்ளது. ஆனால் இந்திய அணியில் ஸ்பின்னர்கள் மூலம் எதிரணியை திணறடிக்கும் ஒரு பெரிய சக்தி உள்ளது. இதற்கு காரணம் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சு ஜோடி அஸ்வின் - ஜடேஜா ஒன்று சேர்ந்திருப்பது தான்.

அஸ்வின் - ஜடேஜா

அஸ்வின் - ஜடேஜா

இங்கிலாந்தின் ஏஜஸ் பவுல் மைதானம், உலகில் உள்ள மற்ற டெஸ்ட் மைதானங்களை காட்டிலும் சற்று அதிகமாக ஸ்விங் ஆகக்கூடியது ஆகும். இங்கு ஜடேஜா மற்றும் அஸ்வின் பெரிய அளவில் நம்பிக்கையுடன் விளையாடியதில்லை. ஜடேஜா இங்கு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளார். அதில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். அதே போல அஸ்வின் கடந்த 2018ம் ஆண்டு ஒரு டெஸ்டில் போட்டியில் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஸ்பின்னர் மொயின் அலி 17 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். எனவே இது ஸ்பின்னர்களுக்கும் நன்கு உதவக்கூடிய ஒன்றுதான் என தெரிகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மணிந்தர் சிங், இந்திய அணியின் நிர்வாக குழுவில் நான் இருந்திருந்தால், நிச்சயம் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுப்பேன். அவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். இங்கிலாந்தில் தற்போது நல்ல வெயில் அடிக்கிறது என அறிந்தேன். அது தொடர்ந்து நீடித்தால், பிட்ச்சானது ஈரப்பதம் இன்றி முற்றிலும் வற்றிவிடும். இது ஸ்பின்னர்களுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்.

அனுபவம்

அனுபவம்

ஜடேஜா தற்போது பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். அதே போல அஸ்வின் தற்போது எந்த களத்தில் வேண்டுமானாலும் ஓவர் வீச தயாராக உள்ளார். தொடக்க காலத்தில் அஸ்வின், தான் விக்கெட் எடுப்பேனா என நம்பிக்கை இல்லாமல் இருந்தார். ஆனால் தற்போது நல்ல அனுபவத்துடன் உள்ளார். அவர் இந்திய களத்தில் பந்து வீசுவதை நாம் பார்த்திருப்போம். எனவே அவர் அயல்நாட்டு மண்ணிலும் அசத்துவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

நம்பிக்கை கொடுங்கள்

நம்பிக்கை கொடுங்கள்

இதெல்லாம் சிறப்பாக அமைவது அணி நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது. கேப்டன் கோலி மற்றும் ரவிசாஸ்திரி, 2 ஸ்பின்னர்களிடமும், உங்களால் முடியும், நிச்சயம் விக்கெட் எடுப்பீர்கள் என நம்பிக்கை கொடுக்க வேண்டும். ரவி சாஸ்திரி வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். எனவே அவர் நிச்சயம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பார் என நம்புகிறேன் எனக்கூறியுள்ளார்.

Story first published: Monday, June 7, 2021, 1:19 [IST]
Other articles published on Jun 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+