Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னிந்திய நடிகையை காதலித்து மணந்த கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே - மினி திருமண ஆல்பம்!

Recommended Video

Manish Pandey married Ashrita shetty | அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணிஷ் பாண்டே

மும்பை : இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, உதயம் NH4 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

நேற்று கர்நாடகா அணிக்காக சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் கேப்டனாக ஆடிய மனிஷ் பாண்டே, தமிழ்நாடு அணியை வீழ்த்தி கோப்பையை வென்றார்.

நாளை திருமணம்

அப்போது பரிசளிப்பின் போது தனக்கு நாளை திருமணம் என்பதை அறிவித்த மனிஷ், அடுத்த சில மணி நேரங்களில் மும்பை சென்று, இன்று காலை தன் திருமணத்தை இனிதே நிறைவு செய்தார்.

அஷ்ரிதா ஷெட்டி அறிமுகம்

அஷ்ரிதா ஷெட்டி விளம்பரங்கள் மூலம், திரைப்பட உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். நடிகர் சித்தார்த் நடித்த உதயம் NH4 படத்தின் மூலம் தமிழகத்தில் அறிமுகம் ஆனார்.

அணியில் மனிஷ் பாண்டே

அடுத்து ஒரு கன்னியும், மூணு களவாணிகளும், இந்திரஜித், நான் தான் சிவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மறுபுறம் உலகக்கோப்பை தொடருக்குப் பின் மனிஷ் பாண்டே இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

இனிதே நடந்த திருமணம்

அஷ்ரிதா - மனிஷ் பாண்டே இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன், இருவரும் இன்று மும்பையில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

இடைவிடாத கிரிக்கெட்

நேற்று இரவு வரை சையது முஷ்டாக் அலி தொடரில் ஆடிய மனிஷ் பாண்டே, டிசம்பர் 6 அன்று நடைபெற உள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் வாழ்த்து

ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்கள் அணி வீரர் மனிஷ் பாண்டேவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பல கிரிக்கெட் வீரர்களும் மனிஷ் பாண்டேவை வாழ்த்தி வருகின்றனர்.

Story first published: Monday, December 2, 2019, 20:45 [IST]
Other articles published on Dec 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+