யாருகிட்டயும் சொல்லாதீங்க! உதயம் NH4 நடிகையை காதலிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்.. விரைவில் திருமணம்!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே விரைவில் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அஷ்ரிதா ஷெட்டி உதயம் NH4 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ஆவார். இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள்.

மனிஷ் பாண்டே இந்திய டி20 அணியில் இடம் பெற்று வருகிறார். ஐபிஎல் வட்டாரத்திலும் முக்கியமான வீரர்.

வெளியான ரகசியம்

வெளியான ரகசியம்

மனிஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ரகசியமாக இருந்த இந்த காதல், தற்போது திருமணத்தை எட்டிய நிலையில் வெளியாகி உள்ளது.

தமிழ் படங்களில் அஷ்ரிதா

தமிழ் படங்களில் அஷ்ரிதா

அஷ்ரிதா ஷெட்டி ஒரு துளு படம் மற்றும் மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார். மற்றொரு தமிழ் படம் விரைவில் வெளியாக உள்ளது. மனிஷ் பாண்டேவை எப்படி அஷ்ரிதா சந்தித்தார் என்பது குறித்து தெரியவில்லை.

ஒரு கிசுகிசு கூட இல்லை

ஒரு கிசுகிசு கூட இல்லை

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். அது பற்றி ஒரு கிசுகிசு கூட வராமல் ரகசியமாக பாதுகாத்து இருக்கிறார் மனிஷ் பாண்டே. தற்போது டிசம்பர் மாதம் மும்பையில் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அந்த ரகசியம் உடைந்துள்ளது.

இரண்டு நாட்கள்

இரண்டு நாட்கள்

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மும்பையில் டிசம்பர் 2 அன்று இவர்கள் திருமணம் குறைந்த உறவினர்கள் - நண்பர்களுடன் நடைபெற உள்ளது. திருமணம் மற்றும் வரவேற்பு என இரண்டு நாட்களாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

டி20 தொடர்

டி20 தொடர்

டிசம்பர் 6 முதல் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் துவங்க உள்ளது. அதற்கு சில நாட்கள் முன்பு, முதல் டி20 நடைபெற உள்ள மும்பையில் தன் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார் மனிஷ் பாண்டே.

ஏன் மும்பையில்?

ஏன் மும்பையில்?

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எளிதாக திருமணத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

கோலி, ஜடேஜாவுடன் ஆடினார்

கோலி, ஜடேஜாவுடன் ஆடினார்

விராட் கோலி, ஜடேஜாவுடன் அண்டர் - 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடியவர் தான் மனிஷ் பாண்டே. அவர்கள் இருவரும் இந்திய அணியில் முன்னணி இடத்தை பிடித்த நிலையில், மனிஷ் பாண்டே இன்னும் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை.

அணியில் மாற்று வீரர்

அணியில் மாற்று வீரர்

30 வயதான நிலையில் அவர் இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மாற்று வீரராக இடம் பெற்று வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் மனிஷ் பாண்டே இடம் பெறுவாரா? என்பது கூட கேள்விக் குறி தான்.

அஷ்ரிதா ஷெட்டி படங்கள்

அஷ்ரிதா ஷெட்டி படங்கள்

அஷ்ரிதா ஷெட்டி உதயம் NH4 மட்டுமின்றி, ஒரு கன்னியும், மூணு களவாணிகளும், இந்த்ரஜித் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நான் தான் சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Manish Pandey’s secret love with Ashrita Shetty opens up as they planning for marriage. Reports says they are tying the knot on December 2.
Story first published: Thursday, October 10, 2019, 20:54 [IST]
Other articles published on Oct 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X