For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட், பிசிசிஐக்கு என்னவெல்லாம் டேமேஜ் செஞ்சோம்னு சஷாங்க் யோசிச்சு பாக்கணும்

ராஜ்காட் : தன்னுடைய பதவிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் மற்றும் பிசிசிஐக்கு செய்த சேதம் குறித்து முன்னாள் ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் மதிப்பிட வேண்டும் என்று முன்னாள் பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

Recommended Video

2011 World Cup Match Fixing : Sangakkara investigated for 5 hours

ஐசிசி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள மனோகர், தற்போது ரிலாக்சான மனநிலையில், இந்த சேதங்கள் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய பிசிசிஐ தலைமை ஐசிசியில் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவ்ளோ காசு வேற யாரும் கொடுக்க மாட்டாங்க.. சீனாவுக்கு எதிரான மனநிலை.. தவிக்கும் பிசிசிஐ!அவ்ளோ காசு வேற யாரும் கொடுக்க மாட்டாங்க.. சீனாவுக்கு எதிரான மனநிலை.. தவிக்கும் பிசிசிஐ!

சஷாங்க் மீதான குற்றச்சாட்டுகள்

சஷாங்க் மீதான குற்றச்சாட்டுகள்

ஐசிசி தலைவராக இருந்த நாக்பூரை சேர்ந்த சஷாங்க் மனோகர், கடந்த புதன்கிழமை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவியில் இருந்தபோது, இந்தியாவிற்கான பல்வேறு சலுகைகளையும் வரவிடாமல் செய்ததாக அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

தொழிலதிபர் குற்றச்சாட்டு

தொழிலதிபர் குற்றச்சாட்டு

சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்ற தொழிலதிபரும் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சஷாங்க் ராஜினாமா செய்துள்ளதன்மூலம் இந்திய கிரிக்கெட்டை சேர்ந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் நேற்று தெரிவித்திருந்தார். அவர் இந்திய கிரிக்கெட்டை சேதப்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி

பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி

புதிய ஐசிசி தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் முன்னதாக சஷாங்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் ஐசிசியில், பிசிசிஐயின் செல்வாக்கு உயர்ந்து வருவதை இது காட்டுவதாகவும் முன்னாள் பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். மேலும் டி20 உலக கோப்பை குறித்து முடிவெடுக்காமல் சஷாங்க் வெளியேறியுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

நிரஞ்சன் ஷா அறிவுறுத்தல்

நிரஞ்சன் ஷா அறிவுறுத்தல்

இந்நிலையில், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் சாவகாசமாக உள்ள சஷாங்க் மனோகர், இந்திய கிரிக்கெட் மற்றும் பிசிசிஐக்கு தன்னுடைய பதவிக்காலத்தில் செய்துள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முன்னாள் பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தற்போதைய பிசிசிஐ தலைமை ஐசிசியில் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, July 3, 2020, 13:48 [IST]
Other articles published on Jul 3, 2020
English summary
BCCI went through much turmoil in last couple of years -Shah
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X