For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டையில் இந்தியாவின் மனோஜ் குமார் முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டையில், 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் மனோஜ் குமார்.

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டி குத்துச்சண்டையில், 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் மனோஜ் குமார்.

மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. இதில் 220 பேர் கொண்ட இந்தியக் குழு பங்கேற்றுள்ளது. முதல் நாளில் மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 Manoj Kumar advances to pre-quarter finals in 69kg in CWG2018

குத்துச்சண்டையில் ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில் மனோஜ் குமார், நைஜீரியாவின் ஒசிடா உமேயை வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடந்த போட்டியில் 5-0 என்ற தீர்ப்பில் அவர் வெற்றி பெற்றார். 31 வயதாகும் மனோஜ் குமார், இந்திய குத்துச்சண்டை வீரர்களில் அதிகம் பிரபலமாகாதவர். மேரி கோம், அகில் குமார், விஜேந்தர் போன்றோர் அளவுக்கு அதிகம் அறியப்படாதவர்.

டெல்லியில், 2010ல் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தங்கம் வென்ற பிறகுதான், அவருடைய பெயர் வெளிச்சத்துக்கு வரத் துவங்கியது. அதன்பிறகு 2007 மற்றும் 2013ல் ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் வெண்கலம் வென்றார். அதன்பிறகு, சர்வதேச போட்டிகளில் அவர் அதிகம் சோபிக்கவில்லை.

2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் காலிறுதியிலும், 2016 ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலும் தோல்வி அடைந்தார். அதன்பிறகு, தொழில்முறை குத்துச்சண்டைந்த வீரராவதற்கு வந்த வாய்ப்பை நிராகரித்தார்.
தற்போது தீவிர பயிற்சிக்குப் பிறகு கோல்ட் கோஸ்ட் சென்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குபு் பிறகு பதக்கம் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

Story first published: Thursday, April 5, 2018, 17:40 [IST]
Other articles published on Apr 5, 2018
English summary
India boxer Manoj Kumar progressed to the pre-quarterfinals in the 69kg category with a 5-0 verdict over Nigerian youngster Osita Umeh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X