ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஜடேஜா சாதனையை முறியடித்த மார்கோ யான்சன்.. நம்பர் 1 இடத்தை பிடித்த அபிஷேக்!
மும்பை: ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், தற்போது மார்கோ யான்சன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மீண்டும் அபிஷேக் சர்மா முதலிடத்தை எட்டி பிடித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சுவாரஸ்மாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த ரவீந்திர ஜடேஜா, தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மார்கோ யான்சன் முதலிடத்திற்கு வந்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய அணியின் பும்ரா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் மிட்சல் ஸ்டார்க் மற்றும் மேட் ஹென்றி 2வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ராபின்சன் 4வது இடத்திலும் இருக்கின்றனர்.
டி20 பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். இஷான் கிஷன் 2 இடங்கள் பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 இடங்கள் பின்தங்கி 9வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சன் 6 இடங்கள் முன்னேறி 20வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
மறுபக்கம் இந்திய டி20 பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 6 இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், அக்சர் படேல் ஒரு இடம் பின் தங்கி 11வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்திய டி20 பவுலர்கள் யாரும் டாப் 10 வரிசையில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
