
இலங்கை தடுமாற்றம்
தொடக்க வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் 5 ரன்னில் ஆட்டமிழக்க, இலங்கை அணி முதல் விக்கெட்டை 6 ரன்களில் இழந்தது. இதனையடுத்து நிசாங்கா மற்றும் தனஞ்செய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தனஞ்செய சில்வா 26 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய நிசாங்கா 40 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்சா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

157 ரன்கள்
அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் காபாற்றுவார் என எதிர்பார்த்த கேப்டன் ஷனாகா 3 ரன்னில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஹசரங்காவும் ஒரு ரன்னில் வெளியேறினார். இந்த நிலையில், அசலங்காவும்,கருணரத்னேவும் ஜோடி சேர்த்து அதிரடியாக ஆட முயற்சித்தனர். கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்களை இலங்கை அணி சேர்த்தது. இதன் மூலம் 137 ரன்களிலிருந்து 157 ரன்கள் என்ற ஸ்கோரை இலங்கை அணி எடுத்தது.

ஆஸ்திரேலியா அமைதி
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதலில் இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். வார்னர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளேவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஒரு பவுண்டரி கூட ஆஸ்திரேலிய அணி அடிக்காதது, டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும். மிட்செல் மார்ஷ் 18 ரன்களில் வெளியேறினார்.

ஸ்டோனிஸ் வெறித்தனம்
இந்த நிலையில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு புத்துயிர் தருவது போல் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 23 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் முதல் பந்தில் இருந்தே ஹல்க் Mode க்கு சென்று, இலங்கை பந்துவீச்சை சிதறடித்தார். 17 பந்தில் அரைசதம் கடந்த அவர் 18 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 327 ஐ தாண்டியது. ஆரோன் பிஞ்ச் 31 ரன்கள் சேர்க்க 16.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











