Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷரபோவா கிரிக்கெட் பார்ப்பது இல்லை, அதனால் அவருக்கு என்னை தெரியவில்லை: சச்சின்

மும்பை: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா கிரிக்கெட் பார்க்காதாதல் அவர் தன்னை தெரியாது என்று கூறியது அவமரியாதையாக தான் கருதவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்தபோது அதை பார்க்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அங்கு சென்றார்.

அவர் விஐபிக்கள் அமரும் இடத்தில் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் அருகில் அமர்ந்து போட்டிகளை பார்த்தார்.

ஷரபோவா

ஷரபோவா

போட்டிகளில் விளையாடிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் விஐபிக்கள் இருக்கையில் யார், யார் இருந்தார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் சச்சின் பெயரை மட்டும் கூறவில்லை.

சச்சினா?

சச்சினா?

உங்களுக்கு சச்சின் டெண்டுல்கரை தெரியாதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தெரியாது, அவர் யார் என்று கேட்டார் ஷரபோவா.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

ஷரபோவா கூறியதை கேட்ட சச்சின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஷரபோவாவை திட்டித் தீர்த்துவிட்டனர்.

பரவாயில்லை

பரவாயில்லை

ஷரபோவா கிரிக்கெட் பார்க்காதவர். அதனால் அவரின் கருத்து அவமதிப்பதாக இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் தனக்கே உரிய அடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 23, 2014, 12:19 [IST]
Other articles published on Jul 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+