லண்டன்:இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் பயிற்சியாளர் மார்க் ராம்பிரகாஷ் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மார்க் ராம்பிரகாஷ் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பேட்டிங் பயிற்சியாளராக 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். வரும் செப்டம்பருடன் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், தற்போதே பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து மார்க் ராம்பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வரும் ஆஷஸ் தொடரின் போது நான் இங்கிலாந்து அணியுடன் இருக்கமாட்டேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியுடன் பயணித்தது மிகப்பெரிய கவுரவம். இங்கிலாந்து அணி பங்கேற்க உள்ள எதிர்கால போட்டிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, வரும் ஆஷஸ் தொடருக்கு, இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான பயிற்சியை, ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் பயிற்சியாளர் கிரகாம் தோர்ப் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.