
காரேஜ் சுத்தப்படுத்தியபோது
மார்க் வாக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறி விட்டார். தற்போது எங்குமே போட்டிகள் நடக்கவில்லை என்பதால் மார்க்கும் கூட ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில் தனது வீட்டு கார் காரேஜை சுத்தம் செய்தபோது அவரது "ஆயுதங்கள்" சிலவற்றைக் கண்டு பழைய நினைவுகளில் மூழ்கியுள்ளார். அந்த நினைவுகளை அவர் ரசிகர்களுடனும் பகிர்ந்துள்ளார்.

மார்க் வாக் ஆயுதங்கள்
ஆயுதங்கள் என்றதும் பயந்து விட வேண்டாம். கிரிக்கெட் பேட்டுகளைத்தான் அவர் ஆயுதம் என்று கூறியுள்ளார். அதை வைத்துக் கொண்டு எத்தனை அதிரடி ஆட்டங்களை அவர் நடத்தியுள்ளார்.. மறக்க முடியாத கிரிக்கெட் அவருடையது. இதுகுறித்து மார்க் கூறுகையில், எனது காரேஜை சுத்தம் செய்தபோது எனது ஆயுதங்கள் சிலவற்றைக் காண நேரிட்டது. பலவருடங்களாக எனக்கு உதவியவை அவை என்று குறிப்பிட்டுள்ளார்.
2வது பேட் பிடிக்கும்
அதில் வலமிருந்து 2வதாக உள்ள பேட்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பேட். மறக்க முடியாத பேட் என்று பழைய நினைவுகளில் மூழ்கி வெளியே வந்துள்ளார் மார்க் வாக். உண்மையில் மார்க் வாக் ஒரு ஸ்டைலான பிளேயர். 1988 முதல் 2002 வரை ஆக்டிவ் வீரராக வலம் வந்தவர். ஸ்டீவ் வாக்கும் இவரும் இரட்டையர்கள். ஆனால் ஸ்டீவ் பிறந்த சில நிமிடம் கழித்து இவர் பிறந்ததால், இவரை செல்லமாக எல்லோரும் ஜூனியர் என்றுதான் சொல்வார்கள்.

நல்ல பேட்ஸ்மேன்
அருமையான வலது கை ஆட்டக்காரர் மார்க். தொடக்க ஆட்டக்காரராக கலக்கியவர். டெஸ்ட் போட்டிகளில் எட்டாயிரத்து சொச்சம் ரன்களையும், ஒரு நாள் போட்டிகளில் 8500 ரன்களையும் குவித்துள்ளார். முதல் தர போட்டிகளில் இவர் குவித்த ரன்கள் 26,000க்கும் மேல் ஆகும். அதேபோல நல்ல ஆல் ரவுண்டராகவும் திகழ்ந்த இவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 130 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











