ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணி தேர்வாளராக மார்க் வாக் நியமனம்
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின், தேர்வாளராக முன்னாள் வீரர் மார்க் வாக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரேவர் ஹோன்ஸ், கிரேக் சேப்பல் மற்றும் மார்க் வாக் ஆகியோர் தேசிய தேர்வு கமிட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைவர் டேவிட் பீவர் கூறுகையில், தேர்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.
புதிய கட்டமைப்பு, தேர்வு முறையில் ஒரு வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஆடப்போவதில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Story first published: Friday, March 10, 2017, 13:41 [IST]
Other articles published on Mar 10, 2017


Click it and Unblock the Notifications