Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் விளையாடுவாரா மார்க் உட்..? நீடிக்கும் சஸ்பென்ஸ்…!! மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

லண்டன்:இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் உட் காயம் தொடர்பான ஸ்கேன் பரிசோதனை வெளியாகி இருக்கிறது.

வரும் 30 தேதியில் இருந்து உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் தொடங்கும் இந்த தொடருக்கு முன்னதாக, தற்போது ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

Mark wood is confident that, he will be fit to take part in icc world cup 2019

நடப்பாண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்நாட்டு அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னணி வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதை பறைசாற்றும் வகையில் பாகிஸ்தானு டனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, அனைத்து போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்து ஒயிட் வாஷ் செய்தது.

சமீபத்தில் உலக கோப்பையில் விளையாட உள்ள இங்கிலாந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை சில முக்கிய மாற்றங்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இந் நிலையில் இங்கிலாந்து வீரரான மார்க் உட்டுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

அப்போது அவருக்கு பதிலாக ஆர்சர் களமிறங்கினார். இதனை அடுத்து மார்க் உட்டின் கணுக்காலை ஸ்கேன் எடுத்த பார்த்ததில் காயம் ஏதும் ஏற்பட வில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே, மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மார்க் உட் கூறியதாவது: ஸ்கேன் பரிசோதனை முடிவுகளில் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. என்னுடைய உலக கோப்பை வாய்ப்பு இன்னும் முடியவில்லை. அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.

Story first published: Tuesday, May 28, 2019, 10:47 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+