கோலி, ஸ்மித்திற்கும் மேலே... அவர்தான் நம்பர் ஒன் -இளம்வீரரை புகழ்ந்த மார்க் வா
சிட்னி : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய இளம் வீரர் மார்னஸ் லாபுசாக்னேவுக்குதான் முதலிடம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் வா புகழ்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மார்னஸ் லாபுசாக்னே, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் மார்னஸ் லாபுசாக்னே சிறப்பாக விளையாடுவதாக தெரிவித்த மார்க் வா, அவருக்குதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் என்றும் கூறியுள்ளார்.

3வது இடத்தை பிடித்த லாபுசாக்னே
இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் மார்னஸ் லாபுசாக்னே 3வது இடத்தை பிடித்துள்ளார்.

முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களம்
இந்நிலையில் வரும் 14ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் முதல்முறையாக லாபுசாக்னே விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரரை புகழ்ந்த மார்க் வா
இந்நிலையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தைவிட சிறந்த நம்பர் ஒன் டெஸ்ட் வீரர் லாபுசாக்னே என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் வா தெரிவித்துள்ளார்.

மார்க் வா நம்பிக்கை
டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ள லாபுசாக்னே, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்று மார்க் வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"ஸ்பின் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்வார்"
ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் பின்ச் மற்றும் வார்னருக்கு அடுத்து ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் நிலையில், அவருக்கு அடுத்ததாக 4வது இடத்தில் லாபுசாக்னே இறக்கப்படுவது சிறப்பான பலனளிக்கும் என்று கூறியுள்ள மார்க் வா, ஸ்பின் பந்துகளை அவர் சிறப்பாக எதிர்கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications