Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாய்னா கடிக்கும்.. இது பாலைக் கவ்விப் பிடிக்குது.. என்னங்கடா நடக்குது இங்கே

சிட்னி: விக்கெட் கீப்பர்களுக்கு நல்ல சவால்தான் இந்த நாய்.. அதாவது வந்த பந்தை அப்படி லாவகமாக எபர்ட்டே போடாமல் அழகாக கவ்விப் பிடித்துள்ளது நம்ம ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுசாக்னே வீட்டு நாய்.

ஆஸ்திரேலிய அணியில் கலக்கி வரும் இளம் வீரர்தான் மார்னஸ். தென்னாப்பிரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் அசத்தி வருபவர். வளர்ந்து வரும் இளம் வீரர்களில் இவர் முக்கியமானவர்.

தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிப் போயுள்ளனர். மார்னஸும் அதேபோலத்தான். ஆனாலும் அவர் சும்மா இருக்கவில்லை. வீட்டு வளாகத்திற்குள்ளேயே கிரிக்கெட் ஆடி வருகிறார்.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

இவர் கிரிக்கெட் வீரராக வந்ததே ஒரு விபத்து போலத்தான். அதாவது 2019ம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதில் சப்ஸ்டிடியூட் வீரராக சேர்க்கப்பட்டவர். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டு முக்கிய வீரராக உயர்ந்தார். 2019ல் அதிக ரன்களைக் குவித்த வீரராக உருவெடுத்தார். அந்த ஆண்டில் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் 4வது இடத்தையும் பிடித்து மிரள வைத்தார்.

நாயுடன் விளையாட்டு

நாயுடன் விளையாட்டு

இப்ப இவர் மேட்டர் இல்லை. இவர் வீட்டு டாக்தான் இப்போது டாக் ஆப் தி டிவிட்டர். அதைப் பற்றித்தான் பேசப் போகிறோம். வீட்டுக்குள் முடங்கியுள்ள மார்னஸ், தனது வீட்டு வளாகத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளார். இவர் வீட்டு நாய்தான் விக்கெட் கீப்பர். கரெக்டாக நின்று கொண்டு அவருக்குப் பின்னால் போய். புல்டாஸாக வந்த பந்தை வாங்கி மார்னஸ் தூக்கி அடித்துள்ளார். பின்னால் வந்த பந்தை நாய் இருந்த இடத்திலிருந்தே அழகாக கவ்விப் பிடித்தது.

அழகாக கவ்விப் பிடித்தது

தனது நாய் அழகாக கேட்ச் செய்ததைப் பார்த்து மார்னஸ் உற்சாகமாகி விட்டார். கையை உயர்த்தியபடி சூப்பர் என்று அவர் பாராட்டினார். இந்த வீடியோதான் தற்போது டிவிட்டரில் வைரலாகியுள்ளது. எப்படி ஈசியாக பந்து வந்தாலும் பிடிக்கத் தெரியாமல் நழுவ விடும் பல விக்கெட் கீப்பர்களுக்கு மத்தியில் இப்படி அழகாக பந்தை கவ்விப் பிடித்த இந்த நாய்க்கு கூடுதலாக ரெண்டு பிஸ்கட் தாராளமாக போடலாம்.

ஒரு வழியா அவுட்டாயிட்டீங்க

இதில் இன்னொரு தமாஷ் என்னன்னா இந்த வீடியோவைப் பார்த்த லோகேஷ் ரஞ்சன் என்பவர் ஒரு வழியாக நீங்க அவுட்டாகிட்டீங்க என்று கூறியுள்ளார். அதாவது அவுட்டே செய்ய முடியாத வீரராக வலம் வரும் மார்னஸை அவரது வீட்டு நாய் அழகாக அவுட்டாக்கி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான், மார்னஸ் சமீப காலத்தில் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த அருமையான வீரர்தான். சந்தேகமே இல்லை.

Story first published: Thursday, April 16, 2020, 9:51 [IST]
Other articles published on Apr 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+