Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதலியைக் கரம் பிடிக்கிறார் பாண்ட்யா.. பட் இவர் அவர் அல்ல பாஸ்!

டெல்லி: கிரிக்கெட் வீரர் பாண்ட்யா தனது காதலியை வரும் டிசம்பர் 27ல் கைப்பிடிக்க உள்ளார். மும்பையில் திருமணம் நடக்க உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு கேட்டுள்ள இந்தியாவின் புதிய கபில்தேவான ஹார்திக் பாண்டியா என்று நீங்கள் நினைத்தால், அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

marriage for Pandya

இந்திய அணியின் புதிய ஆல்-ரவுண்டராக வலம் வரும் ஹார்திக் பாண்டயாவின் அண்ணன் குருணால் பாண்டயாவுக்குத் தான் திருமணம் நடக்க உள்ளது.

கிரிக்கெட் வீரரான குருணால் பாண்டயா, இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கலக்கியது ஞாபகம் வருகிறதா?

26 வயதாகும் குருணால், ஒரு நண்பர் மூலம் அறிமுகமான பங்குரி சர்மா மீது மையல் கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்த இருவரும், வரும் டிசம்பர் 27ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

ஐபிஎல் கோப்பையை மும்பை வென்றதும் தனது காதலை குருணால் தெரிவித்தார். கிரீன் சிக்னல் கிடைத்து, தற்போது அவருடைய வாழ்க்கையின் அடுத்தக் கட்டப் பயணம் தொடர உள்ளது.

புவனேஸ்வர் குமார், ஜாகீர் கானைத் தொடர்ந்து, அடுத்ததாக குருணால் பாண்டயாவின் திருமணம் நடக்க உள்ளது.

Story first published: Wednesday, November 22, 2017, 17:20 [IST]
Other articles published on Nov 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+