Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயெல்லாம் மனுஷனே இல்லை.. 16 சிக்ஸ்.. ஸ்டிரைக் ரேட் 326.. பிக் பாய்ஸை கதற விட்ட மார்ட்டின் கப்தில்

மும்பை: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்த நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 16 சிக்ஸ், 12 ஃபோர் அடித்து 326 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 160 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகை மிரள வைத்தார்.

லெஜண்ட் 90 வாரியர்ஸ் என்ற 15 ஓவர் கிரிக்கெட் தொடரில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் மற்றும் பிக் பாய்ஸ் உனிகாரி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Martin Guptill Legend 90 League

இந்தப் போட்டியில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரிஷி தவான் மற்றும் மார்ட்டின் கப்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஷி தவான் 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மறுபுறம் மார்ட்டின் கப்தில் 49 பந்துகளை சந்தித்து 160 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 326.53 ஆக இருந்தது. துவக்கம் முதலே சரமாரியாக சிக்ஸர்களை விளாசினார். மொத்தம் 16 சிக்ஸ் மற்றும் 12 ஃபோர் அடித்தார்.

15 ஓவர் முடிவில் 326 என்ற நம்ப முடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் அவர் ஆட்டம் இழக்காமல் ஆடியது ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது. சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 240 ரன்கள் எடுத்தது.

பிக் பாய்ஸ் உனிகாரி அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இஷான் மல்கோத்ரா அதிகபட்சமாக ஒரு ஓவரில் 29 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அடுத்து பேட்டிங் செய்த பிக் பாய்ஸ் உனிகாரி அணி 15 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ராபின் பிஸ்ட் 33 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.

இந்தப் போட்டியில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ட்டின் கப்திலின் அதிரடி சதத்தால் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணி பிக் பாய்ஸ் உனிகாரி அணியை எளிதாக வீழ்த்தியது.

Story first published: Tuesday, February 11, 2025, 12:41 [IST]
Other articles published on Feb 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+