இரட்டை விரலுடன், இரட்டை சதம் விளாசினார் மார்டின் கப்தில்..வெளிவராத புதிய தகவல்கள்!
வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்றைய போட்டியில் சதம் விளாசியுள்ளார். ஆனால், அவரது ஒரு காலில் இரு விரல்கள்தான் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்தின் மார்டின் கப்தில் 237 ரன்கள் விளாசி நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை களத்தில் நின்றார்.

அவர் படைத்த சாதனைகள்:
- உலக கோப்பையில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்
- உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம்
- முதல் முறையாக இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து வீரர்
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2வது மிகப்பெரிய தனி நபர் ஸ்கோர். இவையெல்லாம் கப்தில் படைத்த இன்றைய சாதனைகள்.
ஆனால், இரட்டை சதம் விளாசிய அவரின் இடது கால்களில் மொத்தமே இரு விரல்கள்தான் இருக்கின்றன. கப்தில் அவரது 13வது வயதில் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அப்போது இடது காலில் பெருவிரல் மற்றும் அதற்கு அடுத்த விரலை தவிர்த்து பிற மூன்று விரல்களையும் இழந்தார். எனவே, இரட்டை விரல் கப்தில் என்றுதான் நியூசிலாந்து வீரர்களால் அவர் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இதனிடையே, இரட்டை சதம் விளாசியதும், ரசிகர்களை பார்த்து இரு விரல்களை காண்பித்தார் கப்தில். தனது இரு விரல் பற்றிதான் அப்படி கப்தில் கூறியதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அவர் அடித்த சிக்சர் அடித்தபோது, அது மைதானத்தின் மேற்கூரையில் சென்று விழுந்தது. வெலிங்டன் மைதானத்தில், கப்திலோடு சேர்த்து, இதுவரை 2 பேட்ஸ்மேன்கள்தான் அதுபோன்ற ஷாட்டை அடித்துள்ளனர். அதைத்தான் இரட்டை விரலால் சுட்டி காண்பித்தாராம் கப்தில்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளுக்காக எந்த அணியும், கப்திலை ஏலத்தில் எடுத்ததில்லை என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications