Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படிய்யா இப்படி.. கப்தில் குறித்து வியக்கும் கிரிக்கெட் ஸ்டார்கள்!

ஆக்லாந்து: நியூசிலாந்தின் கப்தில் நேற்று மேற்கு இந்திய வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கி ரன் மழை பெய்து மேற்கு இந்தியத் தீவுகளின் கனவைத் தகர்த்து தரைமட்டமாக்கியதை பல முன்னாள் வீரர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

மார்ட்டின் கப்தில் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. தம்மாத்தூண்டு ஸ்டேடியத்தில்தான் இந்த சாதனையை அவர் புரிந்தார் என்றாலும் கூட அவர் விளையாடிய விதம் சிலாகிக்க வைத்து விட்டது.

அத்தனை முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கப்தில்லைப் பாராட்டிக் குவித்து விட்டனர். அதிலும் ராகுல் டிராவிட், எப்படி இவரால் இப்படி விளையாட முடிந்தது என்று வியப்பு காட்டியுள்ளார்.

அடின்னா அடி... இது அடி!

அடின்னா அடி... இது அடி!

கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை... 163 பந்துகள்.. 237 ரன்கள்.. 11 சிக்ஸர்கள்... 24 பவுண்டரிகள்... ஸ்டிரைக் ரேட் 146.. ஒவ்வொரு ஷாட்டும் ஓஹோ ரகம்.. அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே ஆச்சரியகரமானது.

மகா மட்டம்.. லாரா வேதனை

மகா மட்டம்.. லாரா வேதனை

கப்தில் அடித்து ஆடியதைப் பார்த்த முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஸ்டார் பிரையன் லாரா, தனது அணியினரின் பந்து வீச்சு மகா மட்டமானது என்று வர்ணித்தார்.

ஜாம்பவான் அணியா இது...!

ஜாம்பவான் அணியா இது...!

சுத்தமாக மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சு எடுபடாமல் போய் விட்டது. வேகப் பந்து வீச்சுக்குப் புது இலக்கணம் படைத்த மாபெரும் ஜாம்பவான்களைக் கொண்டிருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியா இது என்று அனைவரும் பரிதாபமாக பார்க்கும் நிலைதான் நேற்று ஏற்பட்டது.

தப்பு உங்க பக்கம்தான்

தப்பு உங்க பக்கம்தான்

ஓரளவுக்கு ரன்களை விட்டுக் கொடுக்கலாம்.. ஆனால் ஒரு காலிறுதிப் போட்டியில் 393 ரன்களை ஒரு அணி விட்டுக் கொடுக்கிறது என்றால் நிச்சயம் அந்த அணியின் பந்து வீச்சில் தரம் இல்லை என்றுதான் அர்த்தம்.

அமேஸிங்.. டிராவிட் வியப்பு

அமேஸிங்.. டிராவிட் வியப்பு

கப்தில் ஆட்டம் குறித்து டிராவிட் பேசுகையில் அவரை வெகுவாக் புகழ்ந்து தள்ளி விட்டார். டிராவிட் கூறுகையில், 50 ஓவர்களிலும் ஒரு பேன்சி ஷாட்டைக் கூட கப்தில் அடிக்கவில்லை. அத்தனையும் க்ளீன் ஸ்டிரோக். அமேஸிங்காக உள்ளது நினைத்துப் பார்க்கவே. மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன் என்றார் டிராவிட்.

புது சாதனை

புது சாதனை

கப்தில் அடித்த ரன்களில் 162 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் வந்தவையாகும். இது உலகக் கோப்பையில் ஒரு சாதனையாகும். இருப்பினும் இந்தியாவின் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டியில் 186 ரன்களை பவுண்டரிகள், சிக்ஸர்கள் மூலம் திரட்டி சாதனையை தன் பக்கம் வைத்துள்ளார்.

ஒரு ஆட்டம்.. பல சாதனை

ஒரு ஆட்டம்.. பல சாதனை

நேற்று கப்தில் பல சாதனைகளைப் படைத்தார். உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் அவர்தான். அதே சாதனையைச் செய்த 2வது வீரர் இவரே. இதே உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியல் கெய்ல் முதல் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்திருந்தார். நேற்று கெய்ல் அடித்த சாதனையை கப்தில் முறியடித்தார். கெய்ல் 215 ரன்கள்தான் எடுத்திருந்தார். அதை நேற்று கப்தில் 237 ரன்கள் குவித்து முறியடித்து விட்டார்.

மாஸ் ஆட்டம்...!

மாஸ் ஆட்டம்...!

கப்தில் குறித்து மைக் ஹஸ்ஸி கூறுகையில், ஒவ்வொரு ஷாட்டையும் திட்டமிட்டு செதுக்கியது போல ஆடினார் கப்தில். இது ஆச்சரியமானது. மிகவும் கட்டுப்பாடான இன்னிங்ஸ் அது. பிரில்லியன்ட்டான ஆட்டம். ஒரு மாஸ்டர் போல ஆடினார் கப்தில் என்றார்.

Story first published: Sunday, March 22, 2015, 9:44 [IST]
Other articles published on Mar 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+